எவ்வளவு சொல்லியும் கேட்காததால் மனைவியை கள்ளக்காதலனுக்கு கணவர் திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் சுல்தான்கஞ்ச் நகரில் வசிக்கும் உத்தம் மண்டல் என்பவருக்கும் ககாரியா மாவட்டத்தில் வசித்து வந்த சப்னா குமாரி என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டிருந்தது. 

இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ராஜூகுமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனிமையில் சந்திக்கும் போதெல்லாம் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் காலபோக்கில் கணவருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த  அவர் மனைவியின் கள்ளக்காதலை கண்டித்துள்ளார். மேலும், சப்னா பெற்றோரிடமும் புகார் தெரிவித்தார். ஆனால், சப்னா கள்ளக்காதலை தொடர்ந்தார். 

இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இறுதியில் சப்னாவின் விருப்பம் போல ராஜூவை திருமணம் செய்ய உத்தம் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக அருகிலுள்ள துர்க்கை கோவில் ஒன்றில் திருமண நிகழ்ச்சியை நடத்தினார். உத்தமன் மற்றும் சப்னாவின் குடும்பத்தினர் முன்னிலையில் சப்னாவுக்கு 2வது திருமணம் நடந்தது. எனினும் தனது மனைவியை வேறு யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதை கண்டு கணவர் உத்தம் கண்கலங்கினார். கணவனே மனைவிக்கு 2வது திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.