முத்தம் கொடுக்கும் போது  கோபத்தில் மனைவியின் நாக்கை அறுத்த கணவன்...! பிறகு நடந்த பேரதிர்ச்சி...! 

கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை வித்தியாசமான முறையில் முடிந்துள்ள சம்பவம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைப்பெற்று உள்ளது.

அகமதாபாத்தில் தஸ்லீமா- அன்சாரி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளனர். குறிப்பாக கணவர் அன்சாரி வேலைக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஊரை சுற்றி வருவதும், தேவை இல்லாமல் இருக்கும் பணத்தையும் செலவழித்து குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாகவே மேலும் சண்டை அவ்வப்போது அதிகரிக்கும். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இவர்களுக்கு இடையில் மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. பின்னர் கோபித்துக்கொண்டு அன்சாரி வெளியில் சென்றுள்ளார். பின்னர் கோபமாக வீடு திரும்பிய அன்சாரியிடம்,மனைவி தஸ்லீம் சண்டையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்து, "தனக்கு பிரெஞ்சு முத்தம் கொடுங்க.." என கேட்டுள்ளார்.

பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்கும்போது மனைவியின் நாக்கை பிடித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு நாக்கை அறுத்துள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் அலறிய தஸ்லிமாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கவே வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி ஒரு சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.