மனைவியின் துரோகத்தை விருந்து வைத்து வீடியோ மூலம் வெளிச்சம்  போட்டு காட்டிய கணவர்..! 

மனைவி தனக்கு செய்த துரோகத்தை பெரிய விருந்து வைத்து அனைவரின் முன் வெளிப்படுத்திய கணவனால் அதிர்ச்சியில் மூழ்கினர் உறவினர்கள்.

வெனிசுலா நாட்டை சேர்ந்த ஒருவர், தனது  மனைவி வேறு ஒருவருடன் பேசி வருவதை கவனித்து மனமுடைந்த கணவர் ஒரு வித்தியாசமான  முடிவை எடுத்தார். அதன் படி, தன் மனைவி எப்படிப்பட்டவர் என்பதை  அனைவரின் முன்பும் வெளிப்படுத்த திட்டமிட்ட கணவர், தங்களின்  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரையும் வீட்டிற்கு அழைத்து பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தார்.

அப்போது அந்த நபர் மைக்கில் பேச ஆரம்பித்தார். அவருக்கு அருகிலேயே அவருடைய மனைவி டலியானா நின்று கொண்டிருந்தார், அப்போது பேச தொடங்கிய  கணவர், "என்னுடைய 20 ஆண்டுகால நண்பனும்,வெனிசுலா ஜனாதிபதி நிகோலாஸ் மதுரோவுக்கு நெருங்கிய ஒருவராகவும் உள்ள அல்பர்ட்டோவும் என் மனைவியும் மெசேஜ் செய்து பேசி வருகின்றனர்.இருவரும் திருமணம் செய்துகொள்ள கூட முடிவு செய்து உள்ளனர். இவர்கள் இருவருக்குள்ளும் ரகசிய உறவு இருந்து வருகிறது என அவர் பேசியபடியே, அந்த அனைத்து மெஸேஜையும் உறவினர்கள் முன் எடுத்து காண்பித்து உள்ளார்.


 இதை கண்டு பதற்றம் அடைந்த அந்த பெண், வேகமாக அந்த  செல்போனை கணவரிடம் இருந்து பறிக்க முயல்கிறார். ஆனால் அவரோ ,அருகில் உள்ள நீச்சல் குளத்தில் அந்த மொபைலை தூக்கி எறிகிறார். இந்த காட்சி அடங்கி வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.