தன் பர்ஸிலிருந்து பணம் எடுத்தீங்களா? என கணவரிடம் கேட்டதற்கு, கோபப்பட்ட கணவர் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய விசித்திரமான சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

குஜராத் மாநிலத்தில் கோடாசர் என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ரேஷ்மா - கைலாஷ் குமார். கைலாஷ் குமாருக்கு சமீபகாலமாக வேலை இன்றி வீட்டில் சும்மா இருந்துள்ளார். ரேஷ்மா பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடையில் வேலை செய்து அன்றாட வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பர்சில் வைத்து இருந்த 3 ஆயிரம் ரூபாயை மறுதினம் காலை எழுந்தவுடன் பார்க்கும்போது காணாமல் போயுள்ளது. சந்தேகத்தின் பேரில் தன் கணவரிடம் பணம் எடுத்தீர்களா? என கேட்டுள்ளார். கோபமடைந்து இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி என சண்டையில் இறங்கி உள்ளனர்.

பின்னர் கணவர் மனைவியின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கதறி துடித்த மனைவியை  அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவருடைய மூக்கில் 15 தையல் போடப்பட்டு  தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விசித்திர சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.. அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.