Asianet News TamilAsianet News Tamil

Corona: பொது கழிவறைகளில் ஒட்டியிருக்கும் கரோனா வைரஸ்...!! தர்ம பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா...?

பொது கழிவறைகளை பயன்படுத்தும் நம் அனைவரும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

How to use public toilets during corona
Author
Chennai, First Published Jan 21, 2022, 11:25 AM IST

பொது கழிவறைகளை பயன்படுத்தும் நம் அனைவரும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

உலகம் முழுவதிலும் கரோனா, என்கின்ற கொடிய வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் நம் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இது தற்போது, வரை மூன்று அலைகளாக உருமாறியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 56 லட்சத்துக்கு மேலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இது நம் அனைவருக்கும் பல்வேறு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த 2022இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். இதன் மூன்றாவது அலை, தமிழகத்திலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், அனைவரும் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

How to use public toilets during corona

வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்:

இதில் அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது, போன்ற அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கரோனோவிலிருந்து நம்மை பாதுகாக்க, குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

 அதேபோன்று, வெளியில் எங்கு சென்று வீடு திரும்பினாலும் உடனே குளித்து விடுவது நல்லது.  மேலும், பயன்படுத்திய முகக்கவசத்தை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

கொரோனாவைப் பொறுத்தவரை எங்கு இருக்கிறது? எப்படி பரவுகிறது? என்று இதுவரை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? என்றால், தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும் என நினைத்துக் கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது மட்டுமே நமக்கு நல்லது. 

 பொது இடங்களில் கவனம்:

அதேநேரத்தில், பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது பொதுக் கழிவறையை பயன்படுத்த வேண்டிய சூழல் இருக்கும். அத்தகைய சமயங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் பாக்கெட்டில் ஒரு டிஸ்யூ பேப்பர், சானிடைசர் போன்றவற்றை  கூடவே எடுத்துச் செல்லுங்கள். அந்த டிஸ்யூ பேப்பரை பயன்படுத்தி கழிவறை கதவு, பைப் மற்றும் மக்குகளை எடுக்க உபயோகிப்பது சிறந்தது. இதனை நீங்கள் மட்டும் கடைபிடிக்காமல் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.ஏனெனில், பெரும்பாலான வைரஸ் தொற்றுகள் பொது கழிவறைகள் மூலமாகவே பரவுகிறது.

How to use public toilets during corona

மருத்துவமனைகளில் கவனம்:

அதிலும், குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவராக இருந்தால், நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இருப்பவர்களிடம் கழிவறையை தூய்மையாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளுங்கள். 

மேலும், எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதையும் சொல்லிக் கொடுங்கள். அதாவது, ஒவ்வொரு முறை செல்லும்போது கிருமி நாசினியை பயன்படுத்துவது, கழிவறையை சுத்தம் செய்துவிட்டு திரும்புவது ஆகியவற்றை சொல்லிக் கொடுத்தால், இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடல் நலனுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்! 

Follow Us:
Download App:
  • android
  • ios