முகத்தில் அசிங்கமான வெண்புள்ளிகளா? இப்படி செய்யுங்கள்...அரை மணி நேரத்தில் "கிளீன் வாஷ்"..! 

தான் அழகாக இருக்கவேண்டும் என்பதில் யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் அப்படி தன் சருமத்தை பேணிக்காப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்காக தனி நேரத்தை ஒதுக்கி பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்ய வேண்டும்

அதன் பின்னரும், ஒரு சில கிரீம் முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது அழகு நிலையம் செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. ஆனால் இதெல்லாம் இல்லாமல் பணத்தையும் செலவு பண்ணாமல் நம் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே ஒரு ஃபேஸ் பேக் தயார் செய்து சருமத்திற்கு அப்ளை செய்யலாம்.

அவ்வாறு செய்யும் போது முகத்தில் தோன்றக்கூடிய வெண் புள்ளிகள் நீங்கும். அதனால் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளும் நீக்கமுடியும். முகத்தில் சில இடங்களில் அழுக்குகள் கருப்பாக மாறி ஒரு சில அடையாளத்தை ஏற்படுத்தி விடும். இவை  அனைத்தியும் மிக எளிதாக நீக்க முடியும் அதற்கு செய்ய வேண்டியது இதுதான்.

தேவையான பொருட்கள் :

மஞ்சள்,தேன், பீலர் கிரீம் (கடைகளில் ஃபேஸ் பீலர் கிரீம்) கிடைக்கும். இவை மூன்றும் சேர்த்து கலக்கி அதனுடன் மஞ்சள் மற்றும் தேன் கலந்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.அதன் பின்னர் ஒரு சுத்தமான  ஆடை கொண்டு சுடுதண்ணீரில் தொட்டு,  மூக்கு, தாடையை சுடு  துடைத்துக் கொள்ளுங்கள். பின் பேக்கை மூக்கு மற்றும் தாடையில் அப்ளை செய்துகொள்ளுங்கள். காய்ந்ததும் அதை அப்படியே உரித்து  எடுக்கும் போது வெண்புள்ளிகள் நீங்கி , முகம் பளபளப்பாக  மாறும்