சாப்பாட்டில் எண்ணெய் அதிகமாகிவிட்டதா? 'இந்த' டிப்ஸ் ட்ரை பண்ணுங்க...

Tips To Reduce Oil In Cooking : நீங்கள் சமைத்த உணவில் எண்ணெய் அதிகமாகி விட்டால் அதை எளிதாக அகற்ற சில வழிகள் இங்கே.

how to remove extra oil from food in tamil mks

நாம் சமைக்கும் போது சில சமயங்களில் ஏதாவது தவறு செய்துவிடுவோம். அதாவது உணவில் உப்பு, காரம், புளிப்பு அதிகமாகிவிடும்.  ஆனால் சமைக்கும் போது இப்படி தவறு செய்வது சகஜம் தான். அதுபோலவே, சில சமயங்களில் உணவில் எண்ணெய் அதிகமாகிவிடும். ஆனால், உணவில் எண்ணெய் அதிகமாகிவிட்டால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு. குறிப்பாக, இதனால் இதயம் மிகவும் மோசமாக பாதிக்கப்படும். 

இதுதவிர, எண்ணெய் அதிகமுள்ள உணவை சாப்பிடால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி,  பக்கவாதம், இரத்த அழுத்தமும் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், உணவில் கூடுதல் எண்ணெயை அகற்றுவது சாத்தியமற்றது. அதுவும் குறிப்பாக, வறுத்த உணவுகள், காய்கறிகளில் அதிகப்படியான எண்ணெய் இருந்தால் அதை அகற்றுவது அது இன்னும் சாத்தியமற்றது என்று தான் சொல்ல முடியும். ஆனால், சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். உணவில் கூடிய எண்ணெயை சுலபமாக அகற்றிவிடலாம். அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  வேலை ஈஸினு குக்கரில் இந்த '5' உணவுகளை  சமைக்குறீங்களா? இந்த தவறை பண்ணாதீங்க!!

கறியில் இருந்து எண்ணெய் அகற்ற:

- இதற்கு ஒரு ஐஸ் கியூபை போடவும். இதனால் எண்ணெய் அதில் ஒட்டிக் கொள்ளும். பிறகு கறியில் இருந்து பனிக்கட்டி எடுத்து தூக்கி போடுங்கள்.

- இது தவிர நீங்கள் பிரிட்ஜில் கறியை வைத்தால், அது சில மணி நேரம் குளிர்ந்து எண்ணெய் மேலே உறைந்து இருக்கும். பிறகு அதை நீங்கள் ஒரு கரண்டியை பயன்படுத்தி அகற்றி விடலாம்.

காய்கறிகளிலிருந்து எண்ணெய் அகற்ற:

- காய்கறிகளில் எண்ணெய் அதிகமாகிவிட்டால் ஒரு ரொட்டி துண்டை அதில் சேர்க்கவும். ரொட்டித் துண்டு எண்ணெயை உறிஞ்சி விடும். பிறகு அதை வெளியே எடுக்கவும்.

-  வறுத்த சோள மாவை காய்கறியில் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும். இப்படி செய்தால் வறுத்தமாவானது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும் மற்றும் காய்கறியில் சுவையே கூடும்.

இதையும் படிங்க:  வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வருகிறதா? இதுதான் காரணம்!!

வறுத்த இருந்து எண்ணெய் அகற்ற:

பலகாரங்களை நீங்கள் சமைக்கும் போது எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்தால் அதிகப்படியான எண்ணெய் அதில் இருக்காது. இது தவிர, நீங்கள் பலகாரங்களை டிஷ்யூ பேப்பர் மீது வைப்பதன் மூலமாகவும் எண்ணெய் அதிகமாக அதில் தங்குவதை தவிர்க்கலாம்.

கிரேவியில் இருந்து எண்ணெய் அகற்ற:

கிரேவியில் கூடிய எண்ணெய்யை அகற்ற சோள மாவு அல்லது கடலை மாவு சேர்க்கவும். இதனால் கிரேவி கெட்டியாகும் போது கூடுதல் எண்ணெய் அதில் இருப்பது தெரியாது.

சாஸில் இருந்து எண்ணெய் அகற்ற:

நீங்கள் வீட்டில் தயாரித்த சாஸில் எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை சுமார் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்தால் எண்ணெய் குளிர்ந்து மேலே குவிந்து காணப்படும் அப்பிறகு அதை சுலபமாக அகற்றி விடலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios