வீட்லதானே இருக்கீங்க..? இது தான் "சரியான சான்ஸ்"!  உடல் எடை குறைய இதை செய்து பாருங்க..!

உடல் எடையை குறைக்க 3 மாதங்கள் தொடர்ந்து  இந்த டிப்ஸ்  கடைபிடித்து பாருங்கள் கண்டிப்பாக உடல் எடை விரைவாக குறைந்து விடும் 

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளையும், சரியான அளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் விரைவில் உடல் எடை குறைந்து விடும். ஆனால்  இதில் மிகவும் முக்கியமானது தூக்கம்.சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்துகொள்ளுங்கள்.


மதிய நேரத்தில் உறங்குவதை கட்டாயம் தவிர்த்து விடுங்கள். தண்ணீர் அடிக்கடி குடிப்பது நல்லது. அதிகமாக பைபர் உள்ள உணவு எடுத்துக்கொள்வது சிறந்தது. காரணம் இதனை எடுத்துக் கொண்டால் பசி அடிக்கடி ஏற்படாது. அதிக அளவு உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்க முடியும். 

எந்த காரணத்தை கொண்டும், சிற்றுண்டி தவிர்த்து விடாதீர்கள். சரியான நேரத்தில் தேவையான அளவு உணவு எடுத்துக்கொள்வது நல்லது.பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்போதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். 

ஜங்க் ஃபுட், எடுத்துக்கொள்வதை நிறுத்தவேண்டும் சாக்லேட் பிஸ்கட் இதை தவிர்த்து, பழங்களை எடுத்துக் கொள்வதும், ரைஸ் கேக், ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு செய்து வந்தாலே கண்டிப்பாக உடல் எடை குறைந்து விடும். கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இருக்கும் தருணத்தில் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு உடல் எடையை குறைக்கலாம்.