Asianet News TamilAsianet News Tamil

உடல் எடை குறைய தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு...! ஒரே வாரத்தில் ரிசல்ட்..!

தினமும் விடிந்தவுடன் அனைவரும் முதலில் நினைப்பது தேநீர் அல்லது காபியை தான். தேநீர் அருந்தாவிட்டால் அன்றைய நாள் முழுமை அடையாததைப் போல் உணரும் பலர் இவ்வுலகில் உள்ளனர்.

how to reduce our body weight  bu using coconut oil
Author
Chennai, First Published Nov 12, 2019, 5:02 PM IST

உடல் எடை குறைய தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு....! ஒரே வாரத்தில் ரிசல்ட்..! 

சூடான நீரில் எலுமிச்சை சாறை பிழிந்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெயும் கலந்து குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தற்போது காணலாம். 

தினமும் விடிந்தவுடன் அனைவரும் முதலில் நினைப்பது தேநீர் அல்லது காபியை தான். தேநீர் அருந்தாவிட்டால் அன்றைய நாள் முழுமை அடையாததைப் போல் உணரும் பலர் இவ்வுலகில் உள்ளனர். 

காலையில் தூக்கம் கலைய தேநீர் அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டு இருப்போர் தேநீர் அருந்துவது குறைவு தான். ஏன் என்றால் பாலில் இருக்கும் கொழுப்பு, உடல் எடைக் குறைப்புக்கான முயற்சிக்கு சற்று தடை போடும். இதனாலாயே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பர் அல்லது வெந்நீரில் எலுமிச்சை மற்றும் உப்பைக் கலந்து குடிப்பார்கள்.  

how to reduce our body weight  bu using coconut oil

ஆனால் உடல் எடையைக் குறைக்க இவற்றை எல்லாம் விட அதிக பலன் தரும் ஒரு கலவை உள்ளது. அது தான் வெந்நீரில் எலுமிச்சையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து குடிப்பதாகும். எலுமிச்சை என்றாலே உடலுக்கு அது புத்துணர்வைத் தான் கொடுக்கும். கடும் வெயிலும் சற்று எலுமிச்சை கலந்த பானம் குடிப்பது உடலுக்கு புத்துணர்வைக் கொடுத்து, நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும். இதில் வெந்நீரும், தேங்காய் எண்ணெயும் கலந்து குடித்தால் உடலை நீர் தன்மையோடு வைத்திருப்பதோடு, ஜீரண சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். வைட்டமின் சி-ஐ உடலுக்குள் எடுத்துச் செல்லவும் இது உதவும். 

உடலில் உள்ள தீய கொழுப்புகளை குறைக்க வெந்நீர், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் என இந்த மூன்றுமே மிக முக்கியமானது தான். இவற்றை மொத்தமாக சேர்த்துக் குடிக்கும் போது உடல் பன் மடங்கு வலிமை பெறுகிறது. இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து உடலில் நீர் வற்றி விடாமல் பாதுகாக்கிறது. இதனால் சிறுநீரகமும், கல்லீரலும் வலுப்பெறுகின்றன. 

how to reduce our body weight  bu using coconut oil

சிறுநீர் பைகளை எலுமிச்சை சுத்தம் செய்யும். பொதுவாகவே தேங்காய் எண்ணெய் ஆண்டி பாக்ரீடியல். உடலில் உள்ள கெட்ட வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. தேங்காய் எண்ணெய் உடலுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கிறது. 

தேங்காய் எண்ணெய்யின் பயன்பாடு பற்றியும், வெந்நீரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios