உங்க உடலில் தழும்பு இருக்கா..? கவலையே வேண்டாம்... 

உடலில் உள்ள தழும்புகள் மற்றும் வடுக்களை மிக எளிதாக நீக்குவதற்கு பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் மிக எளிதாக நம் வீட்டிலேயே சிறந்த முறையில் அதனை நீக்குவதற்கான டிப்ஸ் இங்கே பார்க்கலாம்.

வெறும் காபி மற்றும் தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட இந்த களிம்பு, நம் தோலின் மீது தடவி விடும் போது தோலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளித்து புதிய செல்களை உருவாக்குகிறது. செல்களுக்குள் ஊடுருவி நல்ல உறுதித்தன்மையை அளிக்கின்றது.இது போன்று செல்களுக்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டு சருமத்தை காக்கிறது. மேலும் தோலின் மீதுள்ள வடுக்கள் மறைய தொடங்குகிறது.

இது எப்படி சாத்தியம் என கேட்கிறீர்களா? சரும செல்களை ஊடுருவி ரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. மேலும் இந்த செல்களுக்குள் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜன் உள்ளே சென்று செல்களை வளமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் தோல் ஈரப்பதத்துடன் வைக்க உதவும். இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் தோலுக்கு நல்ல ஊக்கமளிப்பதாக இருக்கும்.

இதேபோன்று தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால் ஈரப்பதமாக இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் கொண்டது. அது மட்டுமல்லாமல் நம் தோலை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும். தேங்காய் எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால் தோலின் உள் அடுக்கில் உள்ள செல்களுக்கு ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும் தேங்காய் எண்ணெயில் வைட்டமின் E மற்றும் K அதிகமாக உள்ளதால் உயிரணுக்களை எப்போதும் நல்ல செயல்பாட்டில் வைத்துக் கொள்ளும். 

நம் உடலில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை பராமரிக்கவும், தேங்காய் எண்ணெய் மிகவும் பயன்படும். இளமையை பராமரிப்பதற்கு மட்டுமின்றி, சூரிய கதிர்வீச்சு மற்றும் நச்சுகள் மற்றும் பாக்டீரியா போன்றவை நம் தோலை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும்.

சரி இதனை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாமா? 5 டீஸ்பூன் காபி கொட்டை மற்றும் 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் அலோவேரா ஜெல், 2 டீஸ்பூன் தண்ணீர் போதுமான அளவிற்கு..

தற்போது ஒரு சின்ன பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அரைத்த காபி தூள், மற்றும் தேங்காய் எண்ணெய்,அலோவேரா ஜெல், தண்ணீர் சேர்த்து கலக்கவும். இப்போது ஒரு பேஸ்ட் கிடைத்து  இருக்கும்  அல்லவா..? இதனை ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு  சில  நாட்களுக்கு  பயன்படுத்தி  வரலாம்.

இந்த ஜெல்லை வடுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் இந்த தேய்த்து வர நல்ல மாற்றம் கிடைக்கும். இவ்வாறு தேய்த்து 20 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்திற்கு இவ்வாறு இரண்டு முறை செய்து வந்தாலே போதும். நல்ல மாற்றம் இருக்கும் அல்லது நேரம் இருந்தால் தினமும் செய்யலாம்.