கவலைய விடுங்க....இளநரையை தடுக்க சூப்பர் வழி இதோ..! 

இளநரை பிரச்சனையிலிருந்து தப்பிக்க வழிகள் :

#நரை முடியை முற்றிலும் ஒழிக்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.
#குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால்  நல்ல அடர்தியான கருநிற முடியை பெற முடியும்.

#தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது. இதனால் முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும். 

#முருங்கைகீரையில் இரும்புச் சத்தும், கால்சியமும் அதிகமாக உள்ளது.இதனால் முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்பதுடன் நீளமாக வளரும்.

 #மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் இளநரை மறையும்.

#பித்தம் அதிகமுள்ளவர்கள் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் படிப்படியாக குறைத்து விடுவது நல்லது.

#நெல்லிக்காய் 5, மருதாணி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, 2 லவங்கம் இவற்றைத் தனித்தனியே அரைத்துச் சாறெடுத்து ஒன்றாகக் கலக்குங்கள். இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து தண்ணீர் விட்டு அலசுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவந்தால், இளநரை நெருங்காது.

#இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சைப் பழத்தை அதிகம் சாப்பிட  வேண்டும். 

#  15 செம்பருத்திப் பூக்களை நிழலிலும், வெயிலிலுமாகக் காயவைத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சினால் சிவப்பு நிற எண்ணெய் கிடைக்கும். இதை தினமும் தேய்த்து வந்தால் நரை முடி மறைந்து கருமையாகும்.

# பசுவெண்ணெய்க்கு இளநரையை மாற்றும் தன்மை இருக்கின்றது. தினமும் பசு வெண்ணையைச் சிறிது சாப்பிட்டு வரவேண்டும். வெண்ணையைத் தலை கால்களில் அழுத்தித் தேய்த்து வந்தாலும் இளநரை மாறும்.