how to pray in the temple
கோவிலில் வழிபடுவது எப்படி...?
கோவிலுக்கு செல்லும் முன் சில வரைமுறைகள் இருக்கிறது.அதன்படி, செயல்பட்டால் தான் நாம் கோவிலுக்கு செல்வதன் பொருளே அடங்கும்.
கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை தூய்மையாக இருக்கவேண்டும்.
ஆண்கள் நெற்றியில் திருநீறும் சந்தனமும்,பெண்கள் நாமம் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது.
கோவில் வாயிலில் நுழையும் முன் தண்ணீரால் கை, கால்களை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும்.

கோயிலுக்குள் சென்ற பிறகு யாரிடமும் பேசாமல், இறைவனை மட்டும் மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கோயிலுக்கு சென்றவுடன் முதலில் கோபுரத்தை தரிசிக்க வேண்டும்.
இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி வணங்க வேண்டும்.
கொடி மரம்..!
கொடி மரத்தின் வலது பக்கத்தில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். பிறகு பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலி கொடுத்ததாக வணங்க வேண்டும்.
விநாயகரை வணங்க வேண்டும்..!
பிறகு,விநாயகரை வணங்க வேண்டும்.விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போட வேண்டும்.
நெற்றி பொட்டுகளில் லேசாக குட்டிக்கொள்ள வேண்டும்.
கோயிலுக்குள் சுற்றும்போது வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும்.
மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க வேண்டும்.அர்ச்சனைகள் செய்து ஆரத்தி காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு கோயிலுக்கு வெளியில் அனுமாரை தரிசித்து கோயிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
கண் மூடி சிறிது நேரம் அமைதி காக்கவும்
பிறகு சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கோவிலில் வழிபடும் போது, இது போன்ற சில வரைமுறையை கடைபிடித்தால்தான் அந்த வழிபாடு முழுமை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது
