Maha shivaratri food: மகா சிவராத்திரிக்கு படையல் வைக்கஇந்த பதிவில், சிவனுக்கு பிடித்த இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.
சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு மார்ச் 1 அன்று மகாசிவராத்திரி வருகிறது. அன்றைய தினம் நாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்வோம்.

பிறகு, மகா சிவராத்திரிக்கு படையல் வைக்க பிடி கொழுக்கட்டை ஸ்வீட் கொழுக்கட்டை, சக்கரைவள்ளி கிழங்கு, ஸ்வீட் பொங்கல் என அனைத்தும் செய்து சிவபெருமானை வணங்குவது வழக்கம்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இதனை செய்துதான் சிவனுக்கு சிவராத்திரி அன்று நிவேதனம் செய்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவனுக்கு பிடித்த இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - இரண்டு கப்
வெல்லம் - ஒன்றரை கப்
ஏலக்காய் தூள் - 1\2 டீஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்
துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை :
1. முதலில் ஒருகடாயில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து கொள்ளவும்.
2. பிறகு வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.அதன்பின் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறிக் கொள்ளவும். சப்பாத்தி மாவு பிசைவதை போல் பிசையவும்.

3. இவை ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும். பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து வெந்ததும் இறக்கி பரிமாறலாம். இப்போது சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.
மேலும், மகாசிவராத்திரி நாளில் கீழ்கண்ட விஷயங்களையும் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்:
சிவ ராத்திரி தினத்தில் நாம் வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் வீட்டில் சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோயிலுக்கு சென்று அங்கு சிவலிங்க செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.இவை உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும்.
மகா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது நல்லது. இது முன் வினையையும், இந்த பிறப்பின் வினையையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தது. சிவனின் துதியும், சிவ ஆராதனையும் அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.
