Summer face glow: வெயில் காலத்தில் முக அழகை பராமரிக்க சிம்பிள் டிப்ஸ் ...இந்த விஷயங்களில் கவனம்..!
Summer face glow: கோடைகாலத்தில் சருமத்தை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கோடை காலம் வந்து விட்டாலே, சூரியனில் வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்து விடும்.இந்த ஆண்டு, ஆரம்ப நேரத்திலேயே வெயில் கொடுமை அதிகமாகவே இருக்கிறது. கோடையில், உடல் சூடும் அதிகரித்திருக்கும். சிலருக்கும், முகப்பரு, ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சரும நிறம் மாறுதல் போன்ற தோல் பிரச்சனைகளை ஏற்படும்
எனவே தான் கோடைகாலத்தில் சருமத்தை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சரும பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை:
சூரியனின், நேரடி தாக்கம் உங்கள் சருமத்தை பாதிக்கும். இவற்றை தடுக்க சன்ஸ்கிரீன் லோஷன்கள் பயன்படுகின்றன. புற ஊதா கதிர்கள் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷன், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, உட்புறத்தில் இருந்தாலும், வெளியே செல்வதாக இருந்தாலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
உடலை குளிர்ச்சியாக வைத்திருங்கள்:
கோடையில், ஈரப்பதத்துடன் கூடிய சருமம் ஆரோக்கியமான சருமமாக இருக்கும். எனவே, உங்கள் உடலையும் சருமத்தையும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். இந்த நேரத்தில், குளிர்ச்சியான பானங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். இளநீர், மோர், வாட்டர் மெலன், கரும்பு ஜூஸ் போன்றவை குளிர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்க மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
கோடை காலத்திற்கானமாய்ஸ்சுரைசர்கள், பவுண்டேஷன் க்ரீம்கள், சன்ஸ்கீரின் லோஷன்கள் போன்ற ஆர்கானிக் வகை ஸ்கின் கேர் பயன்படுத்தலாம்.
சரும பாதுகாப்புக்கு செய்யக்கூடாதவை:
குளிர்காலத்தில் வெந்நீர் குளியலைப் போல், கோடை காலத்தில் சவரில் நிதானமாக ஒரு நீண்ட குளியல் போடுவது புத்துணர்வையும், நிம்மதியையும் தரும். ஆனால், நீண்ட நேரம் குளிப்பது, உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் அது வறட்சி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் நீண்ட நேரம் குளிப்பதை தவிருங்கள்.
உள்ளாடைகளை பயன்படுத்தும் போது கவனம்:
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் வேர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்மெனில் சில விஷயங்களை நாம் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
உள்ளாடைகளை துவைத்து பயன்படுத்த வேண்டும். அதேபோன்று, உள்ளாடைகளை துவைத்துவிட்டு வீட்டிற்குள்ளேயே காயப்போடுவது கூடாது. வெயிலில் காயப்போட வேண்டும். அதன்பிறகு தான் அணிய வேண்டும்.மற்றவர்களின், உள்ளாடைகளை அணியக்கூடாது. ஏனெனில், அரிப்புக்குக் காரணமாக பூஞ்சான் கிருமி, யாரிடம் இருந்து வேண்டுமென்றாலும் உங்களுக்கு வரலாம். உங்கள் மேக்கப்பில் உள்ள பொருட்களில், ஆரோக்கியமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.