அலுவலகத்தில்  தன்னுடைய ஆடையால் மற்றவர்களை அலற விடுவது எப்படி தெரியுமா..? 

இன்று என்ன சமையல் என்பதைவிட இன்று அலுவலகத்துக்கு என்ன உடை அணிந்து செல்வது என்பதற்குத்தான் அதிக நேரம் செலவாகும். அதைத் தவிர்க்க சில விசயங்களை பின்பற்றினாலே போதும், உங்கள் அலுவலகத்தில் நீங்கள்தான் ஃபேஷன் ஐகான்.

பெண்மையின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தவறியும் மறந்துவிடக் கூடாது. நேர்த்தியான ஆடை அலங்காரம்தான் அலுவலகத்தில் உங்கள் மதிப்பை அதிகரிக்கும், தேவையில்லாத தொல்லைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.

நீங்கள் அணிந்திருக்கும் உடைதான் உங்கள் மீதான மதிப்பீட்டை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தும் என்பதால் உடை விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதா என்பதும் முக்கியம்.

 உங்களுக்குப் பொருந்தாத உடையை அணிந்துவிட்டு, நாள் முழுக்க  அதிலேயே கவனம் இருந்தால் அலுவலக வேலைகளில் நிச்சயம் தொய்வு ஏற்படும். அதனால் எந்த உடையில் நீங்கள் மிக சௌகரியமாக உணர்கிறீர்களோ அதையே அணியுங்கள்.

கச்சிதமாக உடையணிவது தவறில்லை. ஆனால் அதற்காக மிக இறுக்கமாக ஆடையணிவது தவறு. அதேபோல தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணிவதும் தவறு. உங்களுக்குப் பொருத்தமான, சுத்தமான, அயர்ன் செய்யப்பட்ட ஆடைகளை அணியுங்கள். கலைந்த தலையும் சுருக்கம் நிறைந்த ஆடையுமாக அலுவலகத்துக்குள் நுழைந்தால் சக ஊழியர்களின் கேலிக்கு ஆளாக நேரிடலாம்.

அலுவலகச் சூழலுக்கு உகந்த ஆடைகளை அணிவது அவசியம். எப்போதும் ஃபார்மல் மற்றும் செமி ஃபார்மல் ஆடைகளையே தேந்தெடுத்து அணியுங்கள். சாஃப்ட்வேர், பீ.பி.ஓ மற்றும் மீடியா துறைகளில் இருக்கிறவர்கள் பேண்ட்-ஷர்ட் மற்றும் பேண்ட்-சூட்டை அணியலாம். கழுத்தைச் சுற்றி சில்க் ஸ்கார்ஃப்  அணியலாம். 

அதேபோல ஃபார்மல் ஸ்கர்ட்-ஷர்ட் மற்றும் காட்டன் புடவையும் கண்ணியமான இமேஜைத் தரும். மற்றவர்கள் சல்வார் அல்லது சுரிதார் அணிந்து செல்லலாம். உங்கள் அலுவலகம் அனுமதித்தால் வார இறுதி நாட்களில் ஜீன்ஸ்-டாப் அணியலாம்.

அலுவலகத்துக்கு சோர்வு தரும் வெளிர் நிறங்ளைத் தவிர்ப்பது நல்லது. அதற்காக கண்ணை குருடாக்கும் பளீர் நிறங்களுக்கும் ஆதரவு தரக்கூடாது. உங்களை பெப்பியாக காட்டும் பிங்க் மற்றும் மஞ்சள் நிறங்களையும் தவிர்க்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, கிரே, நேவி போன்ற நிறங்களை நல்லது. ஆடையும் அலங்காரமும் எப்படி உங்கள் இமேஜை முன்னிறுத்துகிறதோ அதேபோல உங்கள் சுத்தமும் உங்களின் மதிப்பீட்டை மாற்றும். சுத்தமான நக பராமரிப்பு, அலைபாயாத கூந்தல், மூக்கை உறுத்தாத பாடி ஸ்பிரே போன்றவையும் உங்கள் மீதான பிறர் பார்வையை மாற்றும்
 
கார்ப்பரேட் ட்ரெஸ்ஸிங் :

அலுவலகத்துக்கு  ஏற்றவாறு ஆடைகளை தேர்ந்தெடுப்பது நீங்கள் நினைப்பது போல சவாலானதல்ல. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கான ஆடைகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், நவநாககரீகமாகவும், மிடுக்கான தோற்றமளிக்கவும் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

1.    பணியிட சூழலை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஆடை தேர்வு: 

இந்தியாவில் உள்ள சட்டம் மற்றும் முதலீட்டு வங்கிகள் கார்ப்பரேட் ட்ரெஸ்ஸிங்கை மிகப்பெரிய பாரம்பரியத்தோடு அணுகுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனத்தில் அவர்கள் வகிக்கும் பொறுப்பு அல்லது வாரத்தில் குறிப்பிட்ட நாளுக்கு மட்டும் ஒரு ஆடை முறை என அவை வித்தியாசப்படுகின்றன. எனவே உங்கள் பணியிட சூழலை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள்.

2.    உங்களுக்கென தனி ஸ்டைலை உருவாக்குங்கள் :

வேலைக்கு சேர்ந்த அந்த நிமிடம் முதல் நீங்கள் பலரை சந்திக்க நேரிடும். அதிலும் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடை அலங்காரம் செய்திருந்தால் நீங்கள் அந்த கூட்டத்தில் தொலைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். இந்த கலாச்சாரம் உங்களை பயமுறுத்தும். இதிலிருந்து விடுபட நீங்கள் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். பணியிடத்தில் நீங்கள் உங்கள் ஆடை நாகரீகத்தை தொடர சில நுட்பமான வழிகள் உள்ளன. எனவே அவற்றை கண்டுபிடியுங்கள். 

3.    உங்கள் உடை சவுகர்யமாக இருந்தால் நம்பிக்கை தானாக வரும் :

நம்பிக்கைக்கு மிக முக்கியம் சௌகரியம். இதனால் அதில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் உடுத்தும்  ஆடை, சரியாக இலேலை என்றால் வேலை செய்ய முடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.

4.    ஸ்பெஷல் ஆடைகள் :

கருப்பு, வெள்ளை, நேவி மற்றும் சாம்பல் நிறங்களை எப்போதும் உங்களது சிறந்த நண்பனாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிற ஆடைகள் உங்களுக்கு பளீச் லுக் தரும். அலுவலகத்தின் முக்கியமான நாட்களில் இது போன்ற நிறங்களை தேர்வு செய்யுங்கள். ஆடைகள் தான் நம்பிக்கைக்கும், வெற்றிக்கும் அச்சாரமிடுவது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.