சொல்லத்தான் நினைக்கிறன் சொல்லமால் தவிக்கிறேன் காதல்சுகமானது என்ற பாடல் வரிகளை நாம்  கேட்டு இருப்போம்.

அதற்கேற்றார் போல் யாருக்கவாது நம் மீது காதல் வந்திருந்தால், அதனை வெளிப்படுத்த தயங்குவர். ஒரு சிலர் அதையும் மீறி தன் காதலை நேரடியாகவே சொல்வார்கள்.

இந்த காதலில் தனக்கு விருப்பம் இருந்தால், சரியான பாதையில் செல்லும். இல்லையென்றால் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படும். இந்த சூழ்நிலையை எப்படி தவிர்ப்பது என்பதை பார்க்கலாம்

ஒருவரின் காதலுக்கு நோ சொல்லி அவரை ஹர்ட் செய்யாமல் இருப்பது எப்படி ?

ஒருவரின் காதலை ஏற்க மறுக்கும் போது, தனக்கு விருப்பம் இல்லை என்பதை ஒரு குறுஞ்செய்தியாக  அனுப்புங்கள். ஏன் என கேள்வி கேட்டால் அதற்கான எந்த விளக்கமும் நீங்கள் தர வேண்டிய அவசியம்  இல்லை.

ஒரு வேளை நீங்கள் சில பல காரணங்களை சொன்னால், அதனை நிவர்த்தி செய்வது எப்படி என  அவர்கள் உங்களிடம்  விளக்குவார்கள்,பின்னர் நீங்கள் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்

ஒருவரின் காதலை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லாதபோதோ அல்லது விருப்பம்  இல்லையென்றாலோ எந்த பதிலையும்  சொல்லாமல் அமைதியாக   இருப்பது நல்லது  கிடையாது.  உங்கள் மௌனம் சம்மதம் என  நினைக்க தோன்றும்

தன்னிடம் காதலை வெளிப்படுத்தியரை கண்டாலே ஓடி போய் ஒளிவதும், ஒதுங்கி செல்வதும் கூடாது . அதே போன்று பிறகு பார்க்கலாம் இப்பொழுது வேண்டாம் என பால்ஸ் ஹோப் கொடுக்க கூடாது.

காதல் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அதில் தெளிவாக இருங்கள்....பிரச்சனையை  தவிர்த்திடுங்கள்