கிளிசரின் மற்றும் பன்னீர் கொண்ட கலவையை வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.

பீட்ரூட்டை வெட்டி அதன் சாற்றை உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப் பழகு பெரும் 

உதடுகள் மென்மையாக வெண்ணையை பூசி வர வேண்டும்

நில ஆவாரை, எலுமிச்சை சாறு  இரண்டையும் கலந்து தடவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறும் 

கொத்தமல்லி சாற்றை இரவில் பூசி வர உதட்டின் கருப்பு நிறம் மாறும் 

ரோஜா இதழ்களை நசுக்கி, சாற்றை எடுத்து பூசி வர உதடுகள் சிவப்பாக மாறும் 

சந்தனத்தை பன்னீரில் குழைத்தும் பூசி வரலாம் 

உதட்டில் ஏற்படும் வெடிப்பு மற்றும் வறட்சியை போக்க பாலாடையை தினமும் தேய்த்து வர வேண்டும் 

ரோஜா இதழ்களை பால்விட்டு அரைத்து பூசி வந்தால் உதட்டு வெடிப்பு மாறும்.