கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற இது வரை சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவ முறையை கையாளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி... கபசுரக் குடிநீரை ஐந்து நாட்கள் தொடர்ந்து அருந்துவது நல்லது என்றும், காலை உணவுக்கு முன்பும், உணவு உண்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பும், இந்த கபசுர நீரை குடிக்கலாம்.

அதே போல்... முடிந்தவரை தினமும் சாப்பிடும் உணவில், தூதுவளை, இஞ்சி, மிளகு, மஞ்சள், பூண்டு மற்றும் சீரகம் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.

இஞ்சியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து பருகுங்கள். தினமும் வைக்கும் ரசத்தில் மிளகு மற்றும் வேப்பம் பூ கலந்து வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட கொடுங்கள். 

சுக்கு பொடியை மதிய சாப்பாட்டின் முதல் பிடியில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுங்கள், அதே போல் இரவில் கடுங்காய் பொடி கலந்த தண்ணீர் அருந்தலாம்.

சாயங்கால நேரத்தில், தூதுவளை சூப், முசுமுசுக்கை அடை போன்றவற்றை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.

இந்த உணவு வகைகள், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றும் விதமாக நம் உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்திகளை கொடுக்கும். முடிந்தவரை எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நாமே கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வது நலம்.