போலி அடிடாஸ் ஷூவை எப்படி கண்டுபிடிக்கலாம்? டூப்ளிகேட் வாங்கி ஏமாறாதீங்க!
அடிடாஸ் நிறுவனத்தில் இருந்து வரும் ஒரிஜினல் ஷூக்களை விட போலி ஷூக்களே அதிகம் கிடைக்கின்றன. இந்த டூப்ளிகேட்களை வாங்கி ஏமாறாமல் இருக்க, சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தையல், லோகோ போன்ற சிலவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
இந்த காலத்தில் எதையும் நம்பி வாங்குவதற்குப் பயமாக இருக்கிறது. மோசடி செய்பவர்கள் ஒவ்வொரு பொருளிலும் போலிகளைத் தயாரித்து, சந்தையில் விற்பனைக்கு வைத்துவருகிறார்கள். குறிப்பாக பிராண்டட் ஷூக்கள் போலியாகத் தயாரித்து விற்பனை செய்வது அதிகமாகக் காணப்படுகிறது. அதில், அடிடாஸ் ஷூக்களின் போலிகளும் உள்ளன.
அடிடாஸ் நிறுவனத்தில் இருந்து வரும் ஒரிஜினல் ஷூக்களை விட போலி ஷூக்களே அதிகம் கிடைக்கின்றன. இந்த டூப்ளிகேட்களை வாங்கி ஏமாறாமல் இருக்க, சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தையல், லோகோ போன்ற சிலவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
அடிடாஸ் பிராண்ட்:
அசல் அடிடாஸ் ஷூவில் “அடிடாஸ் ®” என்று மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும். அடிடாஸ் என்ற பிராண்ட் பெயருக்குப் பக்கத்தில் ® என்ற சின்னம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அசல் அடிடாஸ் லோகோ மிகவும் தெளிவாகவும் பளிச்சென்று தெரியும் விதமாகவும் இருக்கும். போலிகளில் லோகோ மங்கலாக அல்லது தவறாக இருக்கும்.
சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசம்! விஞ்ஞானிகளை அசர வைத்த கண்டுபிடிப்பு!!
உற்பத்தி விவரங்கள்:
பெரும்பாலான அடிடாஸ் காலணிகள் இந்தோனேசியாவில் தயாரிக்கப்படுகின்றன. அசல் அடிடாஸ் ஷூவில் "மேட் இன் இந்தோனேசியா" என்று ஷூ சைஸ் டேக்கில் தெளிவான, தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், போலிகளில் மிகச் சிறிய, தெளிவற்ற எழுத்துகளே காணப்படும். அசல் ஷூவில் "US UK FR JP CHN" என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கும். இவை வெவ்வேறு நாடுகளின் அளவைக் குறிக்கின்றன. ஆனால், இந்த விவரங்கள் கூட போலி ஷூக்களில் இருக்காது.
பொருள்:
அசல் அடிடாஸ் ஷூக்களை நல்ல தரமான பொருட்களால் தயாரிக்கிறார்கள். எனவே அவை மிகவும் வலுவாகவும் நீடித்து உழைக்கக்கூடியவையாகவும் இருக்கும். ஆனால் போலியானவை தரம் குறைந்த பொருட்களால் செய்யப்படுகின்றன. அவை மிகவும் லேசானகவும் இருக்கும்.
தையல்:
ஒரிஜினல் அடிடாஸ் காலணிகளில் தையல் மிகவும் துல்லியமாக இருக்கும். சமமான இடைவெளியில் தையல் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ஷூவின் வளைந்த மேற்பகுதியைச் சுற்றி இருக்கும் தையலைப் பார்க்க வேண்டும். போலி காலணிகளில் இந்தத் தையல் அவ்வளவு சரியாக இருக்காது. அவை சற்று வளைந்திருக்கும் அல்லது சமமான இடைவெளியில் இருக்காது.
கடைகள்:
அடிடாஸ் காலணிகளை வாங்க விரும்பினால், நம்பகமான கடைகளில் வாங்க மட்டுமே வாங்க வேண்டும். அதிகாரப்பூர்வமான அடிடாஸ் கடைகளில் வாங்குவது சிறந்தது. பெரிய ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகளிலும் அடிடாஸ் ஷூக்களை வாங்கலாம். ஆன்லைனில், சமூக ஊடகங்களில் தெரியாத சிறிய கடைகளில் இருந்து வாங்க வேண்டாம்.
சொந்தமாக தனி தீவு... கோடி கோடியா சொத்து... மகாராணி போல வாழ வாழும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!