how to grow the babe just this nis to parents

குழந்தை வளர்ப்பில்,இன்றைய தலைமுறை பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா...

குழந்தை வளர்ப்பு என்பது முன்பெல்லாம் பெரியவர்கள் ஆசியோடு, அவர்கள் கண் முன் நல்லது எது கேட்டது என அனைத்தும் தெரிய வரும்.

இதையும் தாண்டி,குழந்தைகள் வளர்ப்பில்,ஒவ்வொரு பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதி முக்கிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

ஆண் பிள்ளையோ அல்லது பெண் பிள்ளையோ “good touch bad touch “ எது என்பதை புரிய வைக்க வேண்டும்.

மேலாடை இன்றி குழந்தைகள் இருந்தால்,பெற்றோர்களாகிய நமக்கு அவர்களை குழந்தைகளாக தான் பார்ப்போம்.ஆனால் மற்றவர்கள் அப்படி பார்பார்களா என்பது சந்தேகமே....ஒவ்வொருவரின் பார்வை மாறுபடும்...குற்ற சம்பவங்கள் எங்கு வேண்டுமென்றாலும் நடை பெறலாம்..

குழந்தைகளை தனியாக கடைக்கு அனுப்புவதோ அல்லது வெளியில் தனியாக விளையாட அனுமதிபதோ கூடாது. 

குழந்தைகளை பள்ளி வாகனத்தில் அனுப்பினால்,ஓட்டுநரின் விவரம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும்.

யார் அழைத்தால் போக வேண்டும்,யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்பதில் தெளிவு படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு வீட்டின் முகவரி, தொலைபேசி எண் மனப்பாடமாக தெரியும் படி சொல்லி கொடுங்கள்.

படிப்பு என்பது தேவையானது தான்.அதையும் தாண்டி மற்ற விஷயங்களுக்காக ஊக்குவியுங்கள்.

குழந்தைகள் முன் படம் பார்க்கும் போதோ அல்லது சீரியல் பார்க்கும் போதோ கவனம் தேவை....

அது குடும்பபடமாக இருந்தால் சரி...அதற்கு மாறாக குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மீது கூட கசப்பு தன்மை வரமால் பார்த்துக்கொள்வது நல்லது.