குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடலாம்.. ஆனா 'இப்படி'  சாப்பிட்டால் உடலுக்கு அவ்ளோ நன்மை இருக்கு!! 

Jaggery In Winter : வெல்லத்துடன் எந்த பொருள்களை சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

how to eat jaggery in winter season in tamil mks

குளிர்காலத்தில் உடலை பராமரிக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.  ஏனென்றால் இந்த காலத்தில் உடலில் மாற்றங்கள் வரும். அசதியாக, சோம்பலாகவும் இருக்கும். இந்த மாற்றங்களை சமாளிக்க வெல்லம் உங்களுக்கு உதவியாக இருக்கும். குளிர்காலத்தில் உடலை வெப்பமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வெல்லத்துடன் சில பொருட்களை சாப்பிடுவதால் குளிர்காலத்தை எளிதில் சமாளிக்க முடியும். அது குறித்து இந்த பதிவில் காணலாம். 

குளிர்காலத்தில் வெல்லத்தின் மகிமை! 

வெல்லத்தில் காணப்படும் இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம், ஆகியவை முறையே உங்களுடைய எலும்புகள் வலுவாகவும், ரத்தம் பெருகவும், தசைகளின் வலிமைக்கும் உதவுகிறது. உங்களுடைய ஆற்றலை அதிகரிக்க வெல்லம் நல்ல தீர்வாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை மேம்படுத்தி நோய் தடுப்பாற்றலை உருவாக்கும்.   இதனை குளிர்காலத்தில் ஒன்பதால் உடலுக்கு குளிருக்கு ஏற்ற வெப்பம் கிடைத்து இதமாக உணரலாம். 

எள்ளும் வெல்லமும்! 

குளிர்காலத்தில் எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவது பல்வேறு நன்மைகளை தருகின்றன. எள் விதைகளை உண்பதால் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் உடலுக்கு கிடைக்கும். எலும்புகளை வலுவாக்க இவை உதவும்.  வெல்லத்தை வைத்து செய்யப்படும் எள் உருண்டை உடலை வெப்பமாக வைக்க உதவுகிறது. செரிமான மண்டலத்தையும் மேம்படுத்துகிறது.  குளிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் சளி, இருமல் ஆகியவற்றைத் தடுக்க எள்ளும் வெல்லமும் சேர்ந்த கலவை உதவு ம். சருமப் பராமரிப்புக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். 

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் கட்டாயம் வெல்லம் சேர்க்கனுமாம்..  பலருக்கும் தெரியாத '5' காரணங்கள்!! 

இஞ்சியுடன் வெல்லம்: 

இஞ்சியுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவது குளிர்காலத்தில் பல உடல் பிரச்சனைகளை தீர்க்க உதவும். குறிப்பாக தொண்டைப்புண், சளி, இருமல் ஆகியவை உடனடியாக நீங்கும். டீயில் இஞ்சியும் வெல்லமும் சேர்க்கலாம். எள் சேர்த்து செய்யும் லட்டுவில் கூட சுக்கு பொடி அல்லது இஞ்சி கலந்து உண்ணலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். 

இதையும் படிங்க:  வெல்லத்தில் கலப்படம்; போலியை சுலபமா கண்டுபிடிக்க இந்த '1' டெக்னிக் போதும்!!

வேர்க்கடலையுடன் வெல்லம்: 

வெல்லமும் வேர்க்கடலையும் நல்ல குளிர்கால சிற்றுண்டி என்றே சொல்லலாம். வேர்க்கடலையில் புரதச்சத்து, நல்ல கொழுப்புகள் காணப்படுகின்றன. இதனை வெல்லத்துடன் உண்ணும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. குளிரிலிருந்து உடலை பாதுகாத்து வெப்பமாக வைக்க வேர்கடலை உதவும்.  வெல்லமும் வேர்கடலையும் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு அதிகமான ஆற்றலும், தசைகள் வலுவாகவும் மாறும்.  

நெய்யுடன் வெல்லம்: 

பல்வேறு வயிற்றுப் பிரச்சனைகளை நீக்க வெல்லத்தை நெய்யுடன் உண்ணலாம். குளிர்காலத்தில் இப்படி சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். வெல்லமும் நெய்யும் நச்சுநீக்கி போல செயல்படும்.  குளிர்காலத்தில் சரும வறண்டு போகாமல் ஈரப்பதமாக இருக்க உதவும்.  செரிமானத்தை மேம்படுத்தி உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது.  

பாலில் வெல்லம்:

இரவில் உறங்குவதற்கு முன்பாக பாலுடன் வெல்லம் கலந்து குடித்தால் அசதி நீங்கும். ஆழ்ந்த தூக்கத்தை பெற இந்த பானம் உதவியாக இருக்கும். உடலில் ஏற்கனவே ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பானம் வரப்பிரசாதம் எனலாம். ரத்தம் பெருக உதவுகிறது. இரும்புச்சத்து கிடைப்பதற்கு பாலில் வெல்லம் கலந்து குடிக்கலாம் எலும்புகளும் உறுதியாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios