துணையின் நடவடிக்கை இப்படி இருந்தால் கள்ளத்தொடர்பு "கன்பார்ம்"..!

கணவன் மனைவி இடையே இனம் புரியாத ஒற்றுமை இருக்கும் அல்லவா..? அந்த ஒற்றுமையில் திடீரென ஒரு விரிசல் ஏற்பட்டால் அதற்கு சில பல விஷயங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் நார்மலாகவே வந்து விடும். இன்னும் சொல்லப்போனால் கணவன் மீது மனைவிக்கு சந்தேகம் வரலாம். மனைவி மீது கணவருக்கு சந்தேகம் வரலாம்... 
                                                       
சரி அப்படி ஒரு மாற்றம் தன் துணைக்கு வந்தால், எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா..?

திடீரென ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க.... தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ள ஆவலாக இருக்கக் கூடும். மீசை அல்லது தாடியை ட்ரிம் செய்யலாம். இதுவரை அவர் உடற் பயிற்சி செய்து பார்த்திராத நிலையில் நீண்ட நேரம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 

எதை கேட்டாலும் அதிக உணர்ச்சி வசப்படுவார்கள். காரணம் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை சமாளிப்பது கடினம் அல்லவா..? 

நீங்கள் ஆடை உடுத்தும் விதம், பேசும் விதம், உங்கள் எடை அதிகரிப்பு அல்லது வடிவ மாற்றங்கள் என எதெற்கெடுத்தாலும் உங்களை விமர்சனம் செய்யக் கூடும். நீங்கள் பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும், குழந்தைகளிடமும், தன்னிடமும் குறைந்த நேரம் செலவிடுவதாகவும் குறை சொல்லலாம். உங்களை விட்டுவிட்டு புதிய உறவை நோக்கி செல்லும் எல்லா அஸ்திரங்களையும் அவர் உங்கள் மேல் பயன்படுத்தலாம்.

அலைபேசி அழைப்பு வந்தால் வீட்டில் இருக்கும் அதிக சத்தம் காரணமாக, வீட்டு கதவை அடிக்கடி மூடி வைப்பார்கள்... எப்போதும் தனி அறையில் தனிமையாக இருக்க ஆசைப்படுவார்கள்.

கணவர் அலைபேசிக்கு பாஸ்வர்ட் போட்டு லாக் செய்யலாம். அந்த பாஸ்வர்ட் என்ன என்பதை உங்களுக்கு பகிராமல் இருக்கலாம். போனை ஒருவேளை லாக் செய்யாமல், ஒவ்வொரு முறை போன் பேசி முடித்தவுடன் அழைப்பு வந்த எண்ணை அழித்து விடுவது, போனில் உள்ள தகவல்களை உடனுக்குடன் அழிப்பது போன்றவை குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். 

போன் செய்தால் எடுக்காமல் இருப்பது..? 

உங்கள் துணைவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தால், அவர் வெளியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.

பாலியல் தொடர்பு...!

கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் உங்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள விரும்பமாட்டார். முந்தைய காலங்களைப் போல் அதில் அவருக்கு விருப்பம் இருக்காது.

இது போன்ற காரணங்களால் தான் பல பெண்களின் வாழ்க்கை நிம்மதி இழந்து கேள்விக்குறியாகி  உள்ளது. அதே வேளையில், கணவர் செய்யும் இது போன்ற தவறால், மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட வாய்ப்பு  உள்ளது என்கிறது ஆய்வு. காரணம் அவர்களுக்கு உண்டான அன்பு  உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறதோ.. அதை நோக்கி அவர்களும்  பயணிக்க தோன்றும்..

இதை எல்லாம் தவிர்க்க கணவன் மனைவி உறவில் விரிசல் வராமல் இருந்தால் நல்லது. இல்லை என்றால், துரோகமே மிஞ்சும்..!

வாழ்க்கையில் வாழ்க்கை கல்வி அவசியம் அல்லவா..?