தினமும் இதை செய்தால் முதுகு வலி வரவே வராது..! 

காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து மூளைக்கு மட்டும் வேலையை கொடுக்கும் நம்மவர்கள் முதுகு வலியால் பெரிதும் அவதிப்படுவதை நாம் பார்க்கிறோம். இதனை கட்டுப்படுத்த உடனே மருத்துவமனைக்கு சென்று வலி நிவாரிணி எடுத்துக்கொள்ள பழகிக் கொள்கிறார்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டு உள்ள இந்த டிப்ஸ் தினமும் செய்து வந்தாலே போதும் முதுகு வலி வரவே வராது...

காலை எழுந்தவுடன் தினமும் 10 முறையாவது தன் காலை குனிந்து நிமிருங்கள்

வளைந்து அமர கூடாது 

நிமிர்ந்து நிற்க வேண்டும்

உறங்கும் போது சுருட்டி படுக்க கூடாது 

லேசான சிறிய தலையணையை பயன்படுத்தி உறக்கம் கொள்ளலாம்

தினமும் சிறிது நேரம் வேகமாக நடக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரு நிமிடம் கூட ஒரே இடத்தில் அமர கூடாது.

இருசக்கர வாகனம் ஓட்டும் போது குனிந்து ஓட்டக்கூடாது 

சற்று எடை கூடிய பொருட்களை தூக்கும் போது குனிந்தே இருக்காதீர்கள்

காலை மற்றும் மாலை என இரு வேளையும் தன் கைகளை நன்கு மேலோங்கி நீட்டுங்கள்..

கழுத்தை வட்ட வடிவில் மெதுவாக இருபுறமும் சுழற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கண்டிப்பாக முதுகு தண்டுவடத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் நலமாக வாழலாம்.