கொசுவை எப்படியெல்லாம் வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம் தெரியுமா..?

டெங்குவை தடுக்க அதற்கான தடுப்பூசிகள் இதுவரை இல்லை. அதேவேளையில் டெங்கு வராமல் தடுக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

நாம் அணியும் ஆடை நம் உடல் முழுக்க கவர் செய்து இருக்க வேண்டும். மாலை நேரத்தில் வெளியில் செல்லக்கூடாது. அரைகுறை ஆடையுடன் வீட்டில் இருந்தாலும் சரியாக மாலை நேரத்தில் வீட்டின் கதவுகளை மூடுவது சிறந்தது. இவ்வாறு செய்தால் கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கொசுக்களை தடுக்க குட்நைட் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதையும் மீறி கொசுக்கள் வீட்டில் இருந்தால் நாம் உறங்கும் போது நம்மை சுற்றி கொசுவலையை பயன்படுத்தலாம். கதவு, ஜன்னல் அனைத்தையும் மூடி விட்டு ஸ்க்ரீன் போட்டு மறைத்து வைப்பது நல்லது. நாம் பயன்படுத்தும் சோப்பு அல்லது perfumes அதிக நறுமனத்துடன் எப்போதும் வீட்டில் வீசும்படி இருக்கக்கூடாது. கொசுக்கள் தங்க இதுவே ஒரு காரணமாக கூட இருக்கலாம்.

மாலை நேரத்தில் வாக்கிங் செல்வது உடலுக்கு நல்லது. அதேவேளையில் 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்புவது நல்லது. 6 முதல் 7 மணி வரையில் கொசுக்கள் அதிகமாக வெளியில் இருக்கும். அதன் மூலம் பாதிப்பு ஏற்படலாம். நாம் தங்கியிருக்கும் வீட்டின் அருகே தங்கி இருக்கக்கூடிய நீண்ட நாள் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துவது மிகவும் நல்லது. இதில் அதிக கொசுக்கள் உருவாகும் அங்கேயே தங்கி இருக்கும். அதனால் நமக்கு அதிக பாதிப்பு.

இதேபோன்று, நம் வீட்டில் வளர்க்கக்கூடிய பூச்செடிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலும்,அதில் கொசுக்கள் உருவாகலாம். அதனை சரியாக பராமரிப்பது நல்லது.

பக்கெட், பாத்ரூம் அனைத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது போன்ற சிறு சிறு விஷயங்களில் நாட்டம் செலுத்தி வந்தால் கண்டிப்பாக கொசுக்கள் வீட்டிற்குள் இருப்பதை முற்றிலும் தடுக்க முடியும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், டெங்கு வராமலும் தடுக்க முடியும்.