Asianet News TamilAsianet News Tamil

டெங்குவை நாமே பாய் விரித்து வரவேற்கலாமா..? முதல்ல இதை படிங்க..!

மனிதர்களை ஒரு விதமான பதற்ற சூழ்நிலையில் வைத்துக்கொள்வது எதுவென்றால் அது டெங்கு எனலாம். காரணம், ஒரு குறிப்பிட்ட சீசனில், அதாவது ஆண்டின் செப்டெம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மழை காலத்தில் டெங்கு வருவது சாதாரணமாக உள்ளது.

how to control dengue ?
Author
Chennai, First Published Jul 26, 2019, 5:55 PM IST

டெங்குவை நாமே பாய் விரித்து வரவேற்கலாமா..? முதல்ல இதை படிங்க..! 

மனிதர்களை ஒரு விதமான பதற்ற சூழ்நிலையில் வைத்துக்கொள்வது எதுவென்றால் அது டெங்கு எனலாம். காரணம், ஒரு குறிப்பிட்ட சீசனில் , அதாவது ஆண்டின் செப்டெம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மழை காலத்தில் டெங்கு வருவது சாதாரணமாக உள்ளது.

முதலில் டெங்கு என்றால் என்ன..? எப்படி வருகிறது..? அறிகுறிகள் என்ன என்பதை முதலில் பார்க்கலாம் வாங்க....

மழைக்காலத்தில் தான் டெங்கு அதிகமாக பரவும். அதற்கு காரணம் சுகாதாரமற்ற சூழ்நிலையே.. டெங்குவை "எலும்பு முறிவு காய்ச்சல்" என்று கூறுவார்கள். காரணம் டெங்கு வந்துவிட்டால் எலும்பு முறிந்தால், எப்படி ஒரு வலி இருக்குமோ அந்த அளவிற்கான வலி இருக்கும்.

how to control dengue ?

எப்படி பரவகிறது ?

ஏடிஸ் எஜிப்தி என்ற கொசு கடிப்பதன் மூலமாக டெங்கு பரவுகிறது. இந்த கொசு கடித்த ஒரு வாரத்திற்குள் அதற்கான அறிகுறிகள் நம் உடலில் தோன்ற தொடங்கும். முதலில் இந்த கொசு எப்படி இருக்கும் எப்படி என்று பார்க்கலாம் ..கருப்பு நிறமுடைய இந்த கொசுவின் சிறகுகளில் வெள்ளை நிற புள்ளிகளும் இருக்கும். இந்த வகையான கொசுக்களில் பெண் கொசு கடிப்பதன் மூலமாக மேட்டுமே மனிதனுக்கு டெங்கு வருகிறது.

இந்த கொசுக்கள் நீண்ட காலமாக தேங்கியிருக்கும் தண்ணீரில் உண்டாக்கக்கூடியவை. மேலும் அசுத்தமான நீர் நிலைகள், குட்டை போன்றவற்றிலும் மிக எளிதில் உருவாகும், சாக்கடையிலும் இந்த கொசுக்கள் அதிகமாக இருக்கும், பொதுவாக கொசுக்கள் இரவு நேரத்தில் மட்டுமே கடிக்கும். ஆனால் இந்த கொசு பகல் நேரத்திலும் மாலை நேரங்களிலும் கிடைக்கக்கூடிய வகையை சார்ந்தது.

டெங்குவால் பாதிக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை பார்க்கலாம்...!

திடீரென ஏற்படும் அதிகமான காய்ச்சல், தலைவலி, கண்களை சுற்றி உட்புறமாக அதிக வலியை உணர்தல், கண்கள் சிவந்து போவது, வெளிச்சத்தை பார்த்தவுடன் கண்கள் அதிக அளவில் கூசுதல், உடலில் அனைத்து பாகங்களிலும் சிவப்பு புள்ளிகள் ஏற்படுதல். இதைவிட மிகவும் கடுமையான வலி ஏற்படும். இவை அனைத்தும் டெங்குவின் அறிகுறிகள்.

இதில் மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. இந்த தட்டணுக்கள் ரத்தம் உறைவதற்கு உதவக்கூடியவை. இவ்வாறு இரத்த அணுக்களை அழிக்கும் போது ரத்தம் உறையாமல் நம் உடலின் பல்வேறு உறுப்புகளில் இருந்து இரத்தம் கசிய தொடங்கும்.

how to control dengue ?

அதில் குறிப்பாக நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும், பல், ஈறு சிறுநீர் பாதையிலும் ரத்த கசிவை ஏற்படுத்த கூடியவை. இதுபோன்ற சமயத்தில் அதற்கு உண்டான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் கடைசியில் உயிரிழப்பும் ஏற்படக்கூடிய அபாயம் உண்டு. இதுபோன்ற சமயத்தில் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொண்டு உடலில் இரத்த அணுக்களை செலுத்துவார்கள். 

how to control dengue ?

இவை அனைத்தும் செய்துவந்தால் மட்டுமே டெங்குவில் இருந்து மீள முடியும் என்ற நிலை உருவாகிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன..? நாம் என்ன செய்ய வேண்டும்..? எப்படி எல்லாம் டெங்கு பரவாமல் தடுக்க முடியும்..? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை நமது அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios