ஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக... உடனே வாயில் இதை போடுங்க..!
சோம்பு, சாப்பிடுவதற்கு முன்பாக வாயில் போட்டு மெல்ல வேண்டும் இதனால் துர்நாற்றம் வராது. ஜீரண சக்தியும் விரைவாக நடைபெறும்.
ஒரே நொடியில் வாய் துர்நாற்றம் போக... உடனே வாயில் இதை போடுங்க..!
பார்ப்பதற்கு ஸ்மார்ட்டா டிப் டாப்பா ஆடை அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈரத்தாலும் நம் உடலில் இருந்து வியர்வை நாற்றமும், நம் வாயிலிருந்து ஒருவிதமான சகித்துக்கொள்ள முடியாத துர்நாற்றம் வீசினால் யாராலும் அருகில் கூட அமர முடியாது, வெளியில் சொல்லவும் முடியாத ஒரு விதமான சங்கடத்தையும் ஏற்படுத்தி விடும்,
இதன் காரணமாகவே எவ்வளவு பெரிய நபர்களும் கூட இந்த இரண்டு விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். அதனையும் மீறி ஒரு சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வியர்வை நாற்றம் வருவதும் அதிலும் மிக குறிப்பாக வாய் துர்நாற்றம் வருவது இயற்கையாகவே அமைந்து விடுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இருந்தாலும் அதனை மிக எளிதாக சமாளிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சோம்பு, சாப்பிடுவதற்கு முன்பாக வாயில் போட்டு மெல்ல வேண்டும் இதனால் துர்நாற்றம் வராது. ஜீரண சக்தியும் விரைவாக நடைபெறும். அடுத்ததாக... ஏலக்காய் அவ்வப்போது சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் கட்டுப்படுத்த முடியும். சாப்பிட்ட பிறகோ அல்லது மற்ற சாதாரண நேரங்களில் ஒரே ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறைந்து விடும்.
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து தொடர்ந்து கொப்பளித்து வந்தாலும் துர்நாற்றம் மெல்ல மெல்ல குறையும். வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய துளசியை எடுத்து வாயில் போட்டு மெதுவாக மென்று வர மெல்ல மெல்ல துர்நாற்றம் குறைய தொடங்கும்.
உணவுக்கு பின்பு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொண்டால் துர்நாற்றம் வருவதை முற்றிலும் தடுக்கலாம் அல்லது ஆரஞ்சு பழத்தையும் சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொண்டால் துர்நாற்றம் வருவதை தடுக்கலாம்.எலுமிச்சை சாப்பிடும் போது குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பற்களுக்கு சில பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மேற்குறிப்பிட்டுள்ள சாதாரண எளிதான டிப்ஸ் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தாலே போதும். துர்நாற்றம் வருவதை கண்டிப்பாக கட்டுப்படுத்திவிடலாம்.