கருத்துப்போன உங்களது வெள்ளி கொலுசை எப்படி சுத்தம் செய்தால் மீண்டும் புதுசு போல மாறும் என்பதற்கான சூப்பர் டிப்ஸ் இங்கே.
பெண்கள் தங்களது காலில் கொலுசு அணிய விரும்புவார்கள். விதவிதமான எத்தனையோ டிசைன்களில் கொலுசுகள் வந்தாலும் வெள்ளி கொலுசுக்கு எப்போதுமே மவுசு அதிகமாகவே இருக்கும்.
பெண்களின் காலை அழகாக காட்டும் வெள்ளி கொலுசு காலம் செல்ல செல்ல அதன் பொலிவை இழந்து கருத்து போய் மாறிவிடும். கருத்து போன வெள்ளி கொலுசை புதுசாக மாற்ற சிலர் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்வார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்களது கருத்துப் போன கொலுசை மீண்டும் புதுசு போல மாற்றிவிடலாம் தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
கொலுசை சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - பாதியளவு
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
தக்காளி கெட்சப் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
டூத் பேஸ்ட் - சிறிதளவு
பயன்படுத்தும் முறை:
முதலில் எடுத்து வைத்த பாதி உருளைக்கிழங்கை தூவி அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் வெள்ளி கொலுசு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பிறகு பேக்கிங் சோடா தண்ணீரில் சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா மற்றும் உருளைக்கிழங்கு இவை இரண்டும் நீருடன் வினைபுரிந்து கொலுசில் படிந்திருக்கும் கருமையை போக்கும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். வெள்ளி கொழுசு மேற்பரப்பில் படிந்திருக்கும் கருமை படிப்படியாக உதிரும்.
வெள்ளி கொலுசு சூடான தண்ணீரில் இருக்கும் சமயத்தில், ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தக்காளி கெட்சப் மற்றும் டூத் பேஸ்ட் சேர்த்து, நன்றாக கலந்து பசை போல் உருவாகுங்கள். தக்காளியில் இருக்கும் லேசான அமிலத்தன்மை வெள்ளியில் படிந்து இருக்கும் கருமையை போக்க உதவும். அதுபோல டூத் பேஸ்ட்டில் இருக்கும் மென்மையான சீரழிப்பு தன்மை வெள்ளியை மெருகூட்டும். மேலும் வெள்ளியை பளபளப்பாக வைக்க உதவும்.
இப்போது தண்ணீரில் ஊறிருக்கும் வெள்ளி கொலுசை எடுத்து அதன் மீது தயாரித்து வைத்த பசையை தடவி ஒரு டூத் பிரஸ் கொண்டு மெதுவாக தேய்க்க வேண்டும். இப்படி நீங்கள் தேய்க்கும் போது வெள்ளி கொலுசு மீது படிந்திருக்கும் கருமை நீங்கி வெள்ளி கொலுசு புதுசு போல மின்னுவதை நீங்கள் காணலாம்.
