பணிபுரியும் இடத்தில் உங்கள் ப்ரோமோஷன் மற்றும் சம்பளம் அதிகரிக்க... இப்படி செய்தாலே போதுமாம்..! 

பொதுவாகவே நாம் பணிபுரியும் இடத்தில் பல போட்டிகள் பொறாமைகள் இருக்கும். என்னதான் திறமை  இருந்தாலும் ஒரு கட்டத்தில் நேர்மைக்கு  கிடைத்த பரிசு அவமானமும் அசிங்கமும் தான்  மிஞ்சும். அதற்கு  பதிலாக நேர்மையற்ற முறையில் திறமை இல்லாதவர்கள் கூட, அவர்கள் செய்யும் சூழ்ச்சியின்  காரணமாக மிக பெரிய  இடத்தில் அமர்ந்து எட்டி உதைப்பது வாடிக்கை தான் என்றாலும், இங்கு எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், " கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்.... கெட்டவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடுவார் "என்பது தான்.

இதனை புது மொழியாகவே எடுத்துக்கொண்டு சில விஷயங்களை கையாண்டாலே போதுமானது. உங்களுக்கு தேவையான ஒன்று கிடைத்து விடும். அந்த வகையில் நீங்கள் பணி புரியும் இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா..?

யாரையும் நம்பாதீர்கள். ஆனால் நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை.. நீங்கள் மதித்து நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிட்டு வெளியே வரும்போது தூய மனதோடு வீட்டிற்கு செல்லுங்கள். இல்லை என்றால் உங்களது குடும்ப உறுப்பினர்கள் உங்களையும் தாண்டி அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்து சரியான நேரத்தில் வேலையில் இருந்து விடுபடுங்கள். உங்கள் வேலைக்கு தேவையில்லாத மற்ற பேச்சுக்களை யாரிடமிருந்தும் கேட்காதீர்கள். நீங்களும் பேசாதீர்கள். அதன் காரணமாக உங்களை சுற்றி இருக்கும் விஷமிகள் அதை வைத்தே கேம் விளையாடி உங்கள் சீட்டை காலி செய்ய முயற்சி செய்வார்கள்.

எதையும் எதிர்பார்த்து செய்யவே செய்யாதீர்கள். உங்களுக்கு உண்மையில் தக்க சமயத்தில் யாராவது வந்து உதவினால் அவர்களுக்கு என்றும் நன்றியோடு இருங்கள். உங்களுக்கு யாரும் உதவவில்லை என்றாலும் அவர்களுடைய சுயநலத்தை புரிந்து கொண்டு நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்து விட்டு அமைதியாக இருங்கள்.

நீங்கள் உங்கள் திறமையை பணியில் காண்பிக்கும் போதும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், அதற்காக மன நிம்மதி அடையாமல் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஏங்க வேண்டாம். ஏனென்றால் இதுவே உங்களுக்கு முடிவல்ல. இதைவிட பெரிய ஒன்று... உங்களுக்காக சிகப்பு கம்பளம் வீசி காத்திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் மற்றவர்களிடம் உண்மையாக இருந்த அந்த ஒரு தருணங்கள் கண்டிப்பாக பின்னாளில் யாராக இருந்தாலும் உங்களை நினைவில் வைத்திருக்க செய்யும்.

யாரிடமும் ஈகோ பார்க்காதீர்கள் மற்றவர் பார்வையில் நீங்கள் சம்பளத்துக்காக வேலை செய்வதாக குறிப்பிட்டு இருந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருந்து உங்கள் மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள். அது உங்களை மேலும் உயர்த்தும். எங்கு சென்றாலும் நீங்கள்தான் உயர்ந்து காணப்படுவீர்கள்.உங்களுடைய நற்குணங்கள் தான் கடைசி வரை உங்களுடன் வரப்போகிறது என்பதை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறந்துவிடாதீர்கள்.

அடுத்தவர் உங்களை எவ்வளவு கீழ்மட்டத்தில் தள்ளி அனைவரும் முன்னிலையிலும்  அவமானப்படுத்தினாலும் அசிங்கப்படுத்தினாலும் கேவலப்படுத்தினாலும் பொறுமையாக காத்திருங்கள். ஏனென்றால் எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்தி விட முடியாது. 

இதையெல்லாம் தாண்டி உங்களுக்காக என்றுமே உண்மையாக இருப்பவர்கள் உங்களது குடும்பம், நண்பர்கள், உறவினர்கள். அதையும் தாண்டி தரமான 4 நட்பு வட்டம் இதை தாண்டி வேறு யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் யாருக்கு முக்கியத்துவம் தேவை இல்லை என்பதை உணர்ந்து சரியான நேரத்தில் சரியான வேலையை முடித்துக்கொண்டு உங்கள் வேலையில் கவனமாக இருங்கள்.

இன்று உங்களை அவமானப்படுத்துபவர்கள், தூக்கி எறிந்தவர்கள், உங்கள் திறமையை கேலி செய்பவர்கள் பின்னொரு நாளில் உங்களிடம் பெரிய உதவிக்காக கண்டிப்பாக வருவார்கள் அன்று புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் இதுநாள்வரை சேர்த்து வைத்த சொத்து உங்களுடைய நற்குணங்கள் மட்டுமே..."கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பார்கள்" எந்த ஒரு நிலையிலும் தரம் தாழ்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். என்றுமே நீங்கள் சமுதாயத்தில் பெரும் புள்ளிதான் என்பதை இன்றே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இதை எல்லாம் தாண்டி ஒரு சிலருக்கு எளிதாக சம்பள உயர்வு,புரமோஷன் என அனைத்தும் ஈசியாக கிடைக்கும். அதற்கு காரணம்.. அலுவலகத்தில் ஒரு  விஷயமெனன்றால், 9 ஆக  திணித்து மேலிடத்தில் கூறி தான் புத்திசாலி ,நேர்மையானவன் என காண்பித்து கொள்வார்கள்.ஆனால் அந்த ஒரு எண்ணம் சொந்த வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி விடும். எனவே எதை கண்டும் துவளாமல் நம்பிக்கை இழக்காமல் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கே...!