மெலிந்த உடல் குண்டாக வேண்டுமா?

குண்டான உடம்பை வைத்துகொண்டு எப்படி தான் ஒல்லியாக  முடோயுமோ என்ற  எண்ணத்தில்,ஜிம் சென்று காலை மாலை என உடற்பயிற்சி செய்து வரும் நிலையில், ஒல்லியாக இருப்பவர்கள் நாம எப்படா கொஞ்சம் குண்டாக முடியும்...? கன்னம்  கொஞ்சம் தக்காளி மாதிரி

சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார் போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு கள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்.

புரோட்டீன்

இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.

கார்போஹைட்ரேட்

ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும்.

கொழுப்புகள்

பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர்கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது.

குறிப்பு

மேல் குறிப்பிட்டு உள்ள உணவு பொருட்களை, அதிகம் எடுத்துக்கொண்டால் ஒரே ஒரு மாதத்தில் குண்டாகி விடலாம். அதே போன்று, ஏற்கனவே சற்று உடல் எடை அதிகரித்து காணப்படுபவர்கள் இது போன்ற உணவு பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது.