how the soul separates from our body during our last ofice

இறப்பு என்பது தடுக்க முடியாத ஒன்று... எப்படி பிறப்பு உள்ளது அதே போன்று இறப்பு இருக்க தான் செய்யும்..

நம்மவர்கள் பிறக்கும் போது செய்யும் சாங்கிய சம்பிரதாயம் இறக்கும் போது அதற்கென உள்ள சில முறைகளை பின்பற்ற வேண்டும்.

பொதுவான சில முறைகளை பின்பற்றினாலும்,உண்மையில் ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

இறக்கும் தருவாயில்..

இறக்கும் தருணம் வந்துவிட்டால், புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பிராமணருக்கு தானம் செய்ய வேண்டுமாம்.

மரணபடுக்கையில் உள்ள ஒருவரை,கட்டிலில் படுக்க வைக்க கூடாது,உள்வீட்டிலும் படுக்க வைக்ககூடாது.தரையில் தர்ப்பையை போட்டு படுக்க வைக்க வேண்டும்...

ஒரு கதை கேள்விபட்டதுண்டா?

கட்டிலில் படுத்துக்கொண்டே உயிரை விட்டதால் பறிக்ஷிதுராஜா நரகத்தை அடைந்தார் என்பதே இந்த வரலாறு...

ஒரு மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் பூமாதேவியின் மடியிலே இருக்க வேண்டும்.ஆனால் தற்போதைய கால கட்டத்தில் வசதிக்காக,எளிதாக பிரசவம் பார்ப்பதற்காக கட்டிலை பயன்படுத்துகின்றனர்.

இறக்க போகும் மனிதனுக்கு துளசி,சாளிக்கிராம் போன்ற உத்தம பொருட்களை கண்ணில் காட்ட வேண்டுமாம்....

ராம ராம என்ற மந்திரத்தை அவரது வலது காதில் ஓத வேண்டும்...

புண்ணிய சாலிகளுக்கு முகத்தில் உள்ள துவாரங்கள் மூலமாகவும்,ஞானிகளுக்கு சிரசு வெடித்தும், பாவிகளுக்கு மலஜல துவாரம் வழியாகவும் உயிர் பிரியும் என்பது தான் ஐதீகம்..