இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களை ஒப்பிடும்போது, தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத நபர்களுக்கு நோயின் தீவிரம் அதிகரித்து காணப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் ஓமிக்றான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஓமிக்ரான் வைரஸை பரிசோதித்த நிபுணர்கள், ‘இது கோவிட் 19 போல, அதிக அபாயம் கொண்டது அல்ல. மிகுந்த குறைந்த செயல்திறனையே இந்த வைரஸ் பெற்றுள்ளது’ என்கிறார்கள். ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். உதாரணமாக ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனைக்கு செல்ல தேவை இல்லை. வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம். அந்த அளவுக்கு வீரியம் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களை ஒப்பிடும்போது, தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத நபர்களுக்கு நோயின் தீவிரம் அதிகரித்து காணப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பாதி பேர், தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 57,000 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கொரோனா விழிப்புணர்வு பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாத நபர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகள் அத்தனை தீவிரமாக இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 ஓமிக்ரான் மறுபாட்டின் முக்கிய அறிகுறிகள் குறித்து ஆராய்ச்சியின் முடிவில், இதில் சோர்வு, உடல்வலி மற்றும் தலைவலி ஆகியவை நோயாளிகளிடம் அதிகம் காணப்படுகின்றன என்றார். இது தவிர, சில நோயாளிகளில் பலவீனம் குறித்த புகார்களும் பதிவாகியுள்ளன. டெல்டா மாறுபாட்டின் மிகப்பெரிய அறிகுறிகளான மூக்கடைப்பு, அதிக காய்ச்சல், வாசனை இழப்பு அல்லது சுவை இழப்பு ஆகியவற்றை இதுவரை எந்த நோயாளியும் தெரிவிக்கவில்லை. 

தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் ஓமிக்ரானின் அறிகுறிகள்:

அறிக்கைகளின்படி, கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களில் ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் வேறுபட்டு இருக்கின்றன. தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூட்டு வலி, தொண்டை வலி போன்றவை தடுப்பூசி போடப்பட்டவர்களில் காணப்படும் சில அறிகுறிகளாகும்.

தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படும் ஆபத்து?

தொற்றுநோய்க்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனினும், இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்களும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், 
தடுப்பூசி தீவிர நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. இதனுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இன்னலும் இறப்பு அபாயமும் குறைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்ட பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது கொரோனாவிலிருந்து பாதுகாக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாதவர்கள்ளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் தீவிர நோய்கள் உருவாவவதற்குமான அதிக ஆபத்து உள்ளது.

கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்திக்கொள்ளாதவர்களில், ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் முற்றிலும் வேறுபட்டும் சற்று தீவிரமானவையாகவும் இருக்கின்றன. தடுப்பூசி போடப்படாதவர்கள், கோவிட்-19 இன் பொதுவான அறிகுறிகளுடன் கூடுதலாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்கின்றனர் வல்லுநர்கள்.