கார்த்திகை தீபம்...!  எத்தனை விளக்கு ஏற்றினால் என்ன நன்மை தெரியுமா..? 

கார்த்திகை திருநாள் இன்று நாடு முழுக்க சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது அதேபோன்று புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு உள்ளது இது தவிர்த்து

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி பக்தர்கள் லட்சக்கணக்கில் திருவண்ணாமலை மற்றும் பழனி முருகன் கோவில் இன்னும் மற்ற கோவில்களில் திரளாக கூடி உள்ளனர். இதன் காரணமாக சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் கோவிலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதேபோன்று வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக தீபம் ஏற்றுவதன் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் அனைத்தும் நடக்கும். இரு முக தீபம் ஏற்றினால் குடும்பம் சிறந்து விளங்கும். மூன்று முகம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும். நான்கு முக தீபம் ஏற்றினால் செல்வம் அதிகரிக்கும். ஐந்து முக தீபம் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பதை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு தீபம் ஏற்றுவது நல்லது.

இது ஒரு பக்கமிருக்க 27 நட்சத்திரங்களையும் குறிக்கும் வண்ணம் 27 விளக்குகளை ஏற்றுவது சிறந்தது. ஆக மொத்தத்தில் ஒரு வீட்டில் தீபம் ஏற்றும்போது 27 விளக்குகளை ஏற்றினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.