Diabetes: நீரழிவு நோயாளிகள் வாரம் ஒரு முறை, வெண்டைக்காயை ஊறவைத்த அந்த தண்ணீரை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

நீரழிவு நோயாளிகள் வாரம் ஒரு முறை, வெண்டைக்காயை ஊறவைத்த அந்த தண்ணீரை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் என்பது, 40 ஐ கடந்த நம் அனைவருக்கும் வரும் பொதுவான நோயாக தற்போது மாற துவங்கியுள்ளது. இதனை கட்டுக்குள் வைத்திருப்பது, நம் உடல் நலம் மட்டுமின்றி, எதிர் வரும் தலைமுறையினருக்கும் நல்லது. சர்க்கரை நோய் என்பது உங்க இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கும் நோயாகும். இரத்த குளுக்கோஸ் அளவானது அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது உங்கள் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும். சர்க்கரை நோய் இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது. 

இந்நிலையில், நாம் சர்க்கரை நோயினை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை எனினும், அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். ஏனெனில், பிற இணை நோய்களுக்கு மூலதனமாக இந்த சர்க்கரை வியாதி உள்ளது. இதனை எப்படி கட்டுக்குள் வைப்பது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வெண்டைக்காய் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஏராளமான அற்புத பயன்களை கொண்டுள்ள வெண்டைக்காய் நாம் ஏன் நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

மேலும் படிக்க....Diabetes control tips: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க...கடைபிடிக்க வேண்டிய 6 பழக்கங்கள்..!

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் வெண்டைக்காய் நிரம்பியுள்ளது. நீரிழிவு அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தவெண்டைக்காய் ஒரு வரப் பிரசாதம் ஆகும்.

வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் இவற்றில் கலோரிகள் குறைவு மற்றும் அதிக நார்ச்சத்து அதிகம்.

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் வெண்டைக்காய்:

சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டங்களில் வெண்டைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

1. வெண்டைக்காய் பொரியல், குழம்பு, கூட்டு என வித விதமாக செய்து அசத்தலாம்.இதனை ஊறவைத்த தண்ணீரை உட்கொள்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைகிறது.

2. அதுமட்டுமின்றி, வறுத்த வெண்டைக்காயின் விதைகள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க துருக்கியில் பல ஆண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

3. வெண்டைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இரைப்பைக் குழாயிலிருந்து உறிஞ்சப்படும் விகிதத்தைக் குறைப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உறுதிப்படுத்தும் ஒரு நீரிழிவு நோய்க்கு எதிரான உணவுப் பொருளாக பெயரிடப்பட்டுள்ளது. 

4. இது, நீரிழிவு நோய்க்கு உதவுவது மட்டுமல்லாமல், அஜீரணம், பசியைக் குறைத்தல் மற்றும் மக்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருப்பது போன்ற பிற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

5. வெண்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலின் மன அழுத்தத்தை குறைக்கிறது.

6. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அதிக கொலஸ்ட்ரால் அளவை இது கட்டுப்படுத்துகிறது.

வெண்டைக்காயை எப்படி நாம் உட்கொள்வது:

1. வெண்டைக்காயில் பொரியல், குழம்பு, கூட்டு என செய்து அசத்தலாம். 

2. இதைத்தவிர, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சேர்த்து வெண்டைக்காயை வதக்கி சுவைக்கலாம்.

3. வெண்டைக்காயை துண்டுகளாக்கி இரவு முழுவதும் ஊறவைத்த அந்த தண்ணீரை காலையில் பருகி வரலாம்.

மேலும் படிக்க...Methi seeds: தினமும் ஒரு டீஸ்புன் வெந்தயம் போதும்... நீரழிவு, இருமல், முதுகுவலியை கட்டுக்குள் வைக்கும்...!!