ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா அனுப்பி வைத்த மருத்துவர்கள் குழு, ஈரானில் உள்ள 254 இந்தியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தது.

T.Balamurukan

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை.உலக சுகாதார நிறுவனம் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்குதல் தாண்டவமாட ஆரம்பித்திருக்கிறது.

பள்ளிகள்,மால்கள்,என பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது தமிழக அரசு. இந்தநிலையில்,ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா அனுப்பி வைத்த மருத்துவர்கள் குழு, ஈரானில் உள்ள 254 இந்தியர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தது. கடந்த 12 நாட்களாக சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருந்த ரத்தமாதிரி முடிவுப்படி 254 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.