Indian Railways: வயதான பயணிகளுக்கு கருணை காட்டிய ரயில்வே!
மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட ரயிலில் பயணித்த வயதான பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் தக்க சமயத்தில் உதவி செய்துள்ளது.
மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட ரயிலில் ஏறிய வயதான பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய ஊருக்கு பத்திரமாகச் செல்ல இந்திய ரயில்வே உதவி செய்துள்ளது.
84 வயதான கே. என். சுப்ரமண்யா மற்றும் 70 வயதைக் கடந்த சந்திரசேகர் மற்றும் நாகரத்னா ஆகியோர் அகமதாபாத்தில் இருந்து உடுப்பி செல்லும் ஹிஸ்ஸார் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 15ஆம் தேதி ஏறியுள்ளனர். ஆனால் அந்த ரயில் வசாயிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி திருப்பி விடப்படும் என்று ரயில்வே பிப்ரவரி 13ஆம் தேதி அறிவித்திருந்தது. பெங்களூருவில் யெலஹங்கா மற்றும் கேஆர் புரம் நிறுத்தங்கள் வழியாக கோயம்புத்தூரை வந்தடையும் என்று கூறப்பட்டிருந்தது.
ரயிலில் பயணித்த வயதான மூன்று பயணிகளையும் உடுப்பியில் வரவேற்க அவரது உறவினர்கள் தயாராக இருந்தனர். ஆனால், ரயில் கோவைக்குத் திருப்பிவிடப்படுவது பற்றி அவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
ரயில் இருந்த மூன்று பயணிகளின் உறவினர் ஒருவர் இதுபற்றிக் கூறுகையில், “உடுப்பிட்டிக்குப் பதிலாக பெங்களூருவில் அவர்களை அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். 139 என்ற எண்ணில் ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது ரயில் பெங்களூரில் எங்கும் நிற்காது என்று தெரித்துவிட்டார்கள்” என்று கூறுகிறார்.
பெங்களூரில் ரயிலை நிறுத்த முடியுமா என்ற எதிர்பார்ப்பில் தெற்கு ரயில்வேயில் மூத்த அதிகாரியான கிருஷ்ணா ரெட்டியை தொடர்புகொண்டிருக்கிறார்கள். கிருஷ்ணா ரெட்டி பெங்களூரு கே. ஆர். புரம் ரயில் நிலையத்தில் ரயிலை 5 நிமிடம் நிறுத்துமாறு கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்துவிட்டார். இதனால் ரயில் வரும் வயதான பயணிகளைப்பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டிருந்த உறவினர்களுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டது.
“கிருஷ்ணா ரெட்டி ரயிலை நிறுத்துவதற்கு உறுதி அளித்தது மட்டுமின்றி ரயில் வந்துகொண்டிருக்கிறது என்பது பற்றியும் அவ்வப்போது தகவல் அளித்துவந்தார். ரயில் மாலை 5.45 மணிக்கு கே. ஆர். புரம் ரயில் நிலையத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் எஞ்சின் மாற்றுவதற்காகத் தாமதித்திருந்த காரணத்தால் மாலை 6.15 மணியை வந்தது. வயதான மூவரும் பத்திரமாக இறங்கிவிட்டார்கள்” என்று அவர்களை அழைத்துச் செல்ல வந்த உறவினர் கூறுகிறார்.
84 வயது முதியவர் சுப்ரமண்யா ரயில் வழிமாறிச் செல்வது பற்றி அறிந்தால் பதற்றம் அடையக்கூடும் என்பதால் அவரிடம் இதைப்பற்றித் தெரிவிக்கவில்லை. உடன் பயணித்தவரிடம் தகவல் தெரிவித்து கே. ஆர். புரத்தில் ரயில் நிறுத்தப்படும்போது இறங்கிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
“கோயம்புத்தூர் வரை சென்றிருந்தால் வயதானவர்கள் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதுவும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அந்த மாதிரி சூழ்நிலையில் என்ன வேண்டுமானாலும் நேரலாம். ஆனால், மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ரயில்வே நிர்வாக உதவி செய்திருக்கிறது” என்று பயணிகளின் உறவினர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
“இந்திய ரயில்வேக்கு எங்கள் குடும்பத்தினர் உண்மையிலேயே நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். ரயில்வே பயணிகளுக்குச் செய்த உதவிகள் பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அதை நாங்களே நேரடியாகக் கண்டிருக்கிறோம். அதுவும் திரு. ரெட்டி போன்ற அற்புதமான அதிகாரிகள் உதவ முன்வந்தது எங்கள் அதிர்ஷ்டம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 15, 22 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் ஹிஸ்ஸார் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு வழியாக கோவை வரை மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டு ஹிஸ்ஸார் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்படும் என கடந்த திங்கட்கிழமை ரயில்வே அறிவித்துள்ளது.
புதைந்து கிடக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தின் மர்மம்.. 15 பேர் நிலை என்ன? அதிரடி முடிவு எடுத்த டிஜிபி..!