கடுமையான வெயில் எச்சரிக்கை..! உஷார் மக்களே.. இனி தான் பிரச்சனை..! 

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மீள முடியாத இந்த தருணத்தில் மீண்டும் அதிர்ச்சி தரும் வண்ணமாக டெல்லியில் கடும் வெயில் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி அடுத்து வரும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு அதிகப்படியான வெப்பநிலை பதிவாகும் என்றும்,அதே நேரத்தில் மழைக்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதுதவிர பஞ்சாப் ராஜஸ்தான் உத்திரபிரதேசம் மாநிலங்களிலும் வெப்பநிலை கடுமையாக உயரும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த மாநிலங்களிலும் மழைக்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் 29ஆம் தேதி தேதியான இன்றுடன் முடியும் தருவாயில் அடுத்துவரும் நாட்களில் வெயில் மெல்ல மெல்ல குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் இனி தான் அதிக வெயில் நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை அடுத்து மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.