அடுத்த 3 நாட்களுக்கு தொடர் அனல் காற்று..! 

தமிழகத்தில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் தமிழகத்தின் சில மாவட்டத்தில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொருத்தவரையில் 29 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தற்போது கத்திரி வெயில் நிலவி வருவதால் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் சென்னையை பொருத்தவரை மழை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். வரும் 29ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் என்பதால் வரும் நாட்கள் முழுக்க அனல் காற்று வீசவே அதிக வாய்ப்பு உள்ளது என ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.