அதிர்ச்சி செய்தி: இந்த 3 மாவட்ட மக்களுக்கு இப்படி ஒரு கஷ்டமா...? 

அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை திருவள்ளூர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என கூறப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வரக்கூடிய காற்று திசை மாறி உள்ளது. இதன் காரணமாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வறண்ட காற்று வீசுகிறது. இதன் எதிரொலியாக பல நகரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இது தவிர வங்க கடலில் இருந்து காற்று வீசாததால் கடலோர நகரங்களிலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வழக்கத்தைவிட 7 டிகிரி வெப்பம் உயர்ந்து காணப்படும்.

அதன்படி பார்த்தால் பொதுவாக 104 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகும் என கூறப்படுகிறது. சென்னை காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் நாகப்பட்டினம் அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும், சேலம் நாமக்கல் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தை விட7 டிகிரி  வெப்பநிலை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாலை நேரத்தில், குறிப்பாக திருத்தணி வேலூரில் 108 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரி, நாகப்பட்டினம் மதுரை உள்ளிட்ட இடங்களில் 104 டிகிரிக்கும். தற்போதைக்கு தமிழகத்திற்கு மழைக்கான எந்த அறிகுறியும் இல்லை.

அதேவேளையில் தென்மேற்கு பருவ காற்று வீச தொடங்கினால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர நீலகிரி சேலம் கோவை திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.