சூரியன் ராசி மாற்றத்தால் 12 ராசிகளுக்கு எப்படி இருக்கப் போகிறது? யாருக்கெல்லாம் ''ஜாக்பார்ட்'' யோகம் தெரியுமா.

Horoscope: ஜோதிடத்தில் சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் சுப பலன்களைத் தரும்போது அதிர்ஷ்டம் மழையாகப் பொழியும். யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்த்து கொள்ளுங்கள்.

Horoscope today astrology predictions

ஜோதிடத்தில் சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் சுப பலன்களைத் தரும்போது அதிர்ஷ்டம் மழையாகப் பொழியும். யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்த்து கொள்ளுங்கள்.

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிரடியாக திட்டங்களை தீட்டுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருகும்.  

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது உற்சாகம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாயாரின் உடல் நலம் சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் சாதக பலன் உண்டு. 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு விமர்சங்களை கண்டு அஞ்சாதீர்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திடீர் பயணம் உண்டு. 

கடகம்: 

சில காரியங்கள் அலைந்து, திரிந்து முடிக்க வேண்டிய சூழல் வரும். வாகனம் செலவு வைக்கும். அதிக அலட்சியம் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். 

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்கள் தவறு செய்பவர்களை துணிச்சலுடன் தட்டி கேட்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் ஏற்படும். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பண வரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.  

துலாம்: 

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய உதவி கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை அவசியம். 

விருச்சிகம்: 

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். 
திருமண பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணம் இரட்டிப்பாக புழங்கும். 

தனுசு: 

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இந்த நாள் உங்களுடைய தேவை அறிந்து மற்றவர்கள் செயல்படுவதாக உணர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மனம் விட்டு பேசி மகிழ்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும்.

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு நிர்வாக திறமை வெளிப்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன்னேற்றம் காணப்படும். உங்களை சுற்றி இருபவர்களில் நல்லவர்களை கண்டறிவீர்கள்.

மீனம்: 

கடின உழைப்பால் இலக்கை எட்டி பிடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் புது வெளிச்சத்தை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். ஆரோக்கியம் மேம்படும்.ஆன்மிக பயணம் செல்லும் யோகம் கிடைக்கும்.


மேலும் படிக்க....Shani Horoscope: அர்த்தாஷ்ட சனியின் பார்வையில் இருந்து தப்பித்து, பிழைக்கும் 4 ராசிகள்...இன்றைய ராசி பலன்!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios