Shani Horoscope: அர்த்தாஷ்ட சனியின் பார்வையில் இருந்து தப்பித்து, பிழைக்கும் 4 ராசிகள்...இன்றைய ராசி பலன்!

Shani Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ராசி மாறுகிறது. இந்த ராசி மாற்றம் சிலருக்கு நன்மை பயக்கும், சிலருக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.  

These 5 zodiac signs are relieved from Arthashtama Sani Peyarchi

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ராசி மாறுகிறது. இந்த ராசி மாற்றம் சிலருக்கு நன்மை பயக்கும், சிலருக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.  

அதன்படி, ஏப்ரல் 29-ம் தேதி ஏற்படவிருக்கும் சனி பெயர்ச்சி பலருக்கும் பலவிதமான பலன்களை கொடுக்கவிருக்கிறது. சில ராசிகளுக்கு அர்தாஷ்டம சனி தொடங்குகிறது. சனிப்பெயர்ச்சியில், அர்த்தாஷ்டம சனியால் என்னனென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, அர்த்தாஷ்டம சனியில் தாக்கத்தினால், சில ராசி கார்களுக்கு பொருள் மற்றும் நிதி செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு, திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். 

மேஷம்:

சனி பகவான் மேஷ ராசிக்காரர்களின் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார்.  இந்த ஸ்தானம் லாபம் மற்றும் வருமானத்துக்கான ஸ்தானமாகும். இந்த நேரத்தில் உங்களின் தொழிலில் முன்னேற்றம் தோன்றும். எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று எளிதில் கிட்டும். 

ரிஷபம்:

இந்த ராசியின் அதிபதி சுக்ர தேவன் ஆவார். சனி பகவானும் சுக்ரனும் நட்பு கிரகங்கள். ஆகையால், சனி பகவானின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையப் போகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக இருக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவு கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கும்.

கடகம்: 

சனியின் ராசி மாற்றத்தினால் கடக ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கடகம், ராசிக்கார்களின்  ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கை வெற்றியாக அமையும்.  இது தவிர, சனி பெயர்ச்சி காலத்தில் செலவுகளும் அதிகரிக்கும்.  ஆனால், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் ஏற்படும். 

தனுசு: 

சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சனிபகவான் ராசி மாறுவதால் உங்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். உங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மரியாதையும் கிடைக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம்

மேலும் படிக்க ....Horoscope: செவ்வாய், சனியின் அருளால் பம்பர் பலனை அடைய காத்திருக்கும் ராசிகள்....இன்றைய 12 ராசிகளின் பலன்கள்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios