Horoscope: ராகு, கேது பெயர்ச்சி.! ஏப்ரல் மாதம் முழுவதும் ராஜ யோகம் பெறும் ராசிகள்...இன்றைய 12 ராசிகளின் பலன்!

Horoscope Today: கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த இடப்பெயர்ச்சி, 12 ராசிகளுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Horoscope today astrology predictions

ஜோதிடத்தின் படி, இந்த மாதம் பல பெரிய மற்றும் முக்கியமான கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. குறிப்பாக, மீன ராசியில் சூரியன், புதன், ரிஷபத்தில் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, செவ்வாய், கும்ப ராசியில் குரு, சுக்கிரன் என கிரகங்கள் பயணிக்கின்றன.

ராகு, கேது இடப்பெயர்ச்சி:

கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரகங்களின் சஞ்சாரம் 12 ராசிகளிலும் விளைவை ஏற்படுத்தும். இருப்பினும், இந்த வருடம் ஏப்ரல் மாதம், அனைத்து ராசிகளுக்கும் சிறப்பானதாக இருக்கும். அப்படி, 12 ராசிகளுக்கு என்னென்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

மேஷம்:

மேஷம் ராசிகர்களுக்கு இந்த மாதம் நன்மை பயக்கும். இவர்களின், பொருளாதார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுப காரிய நடந்து முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை சாதக பலன் உண்டு. குழந்தைகளின் கல்வி மற்றும்  ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம் :

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் மாதம் முழுவதும் ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல பலன் தரும். காரணம் குருவின் பயணம் லாப ஸ்தானத்திற்கு வருவதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். வேலையில், இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற காலமாகும். 

மிதுனம்:

மிதுனம் ராசியினர் ஏப்ரல் மாதம் முழுவதும் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுகபோகங்கள் விரிவடையும்.பணியிடத்தில் மாற்றம் சாத்தியம், கடின உழைப்பு அதிகம் தேவை. தாயின் ஆதரவை பெறுவீர்கள். லாபம் கூடும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும், பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

கடகம்:

கணவன் மனைவி இடையே நட்பு மலரும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் தீரும். 

துலாம்:

துலாம் ராசிகர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரிய முயற்சிகளுக்கு தடை, தாமதங்கள் நீங்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகளை பெறுவீர்கள். வெளிநாடு, வெளியூர் தொடர்பான வேலை விஷயங்களில் சாதக பலன் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதன் மூலம் முன்னேற்றம் நிச்சயம். 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் நன்மை தரும். குழந்தை பாக்கியம் இல்லாத நபர்கள் குழந்தை பாக்கியம் அடைவார்கள். நீங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்ப உறவுகளுடன் அன்பு அதிகரிக்கும். காதல் காரியத்தில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் அதிகரிக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் இதுவாகும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதம் முழுவதும்,  பல்வேறு வெற்றிகளை கண் முன்னே பார்ப்பார்கள். இந்த நேரத்தில் தொழிலில் நீங்கள் புதிய உச்சத்தை தொடலாம்.வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய வாய்ப்புகள் உண்டாகும். திருமண காரியங்கள் கைகூடும். போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்கள் வெற்றியடையும் வாய்ப்பு கிடைக்கும். 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். சனி பகவானால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறையும். லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண ஆதாயங்களின் தொகையைப் பெறுவீர்கள். வேலை மாற்றத்திற்கு சாதகமான காலம். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் அனுகூலமாக இருக்கும். உத்யோகத்தில் சிறப்பு யோகம் உண்டாகும். அரசு வேலை செய்பவர்களின் இடத்தில் மாற்றம் வரலாம். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது தவிர உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

மகரம்:

மகரம் ராசிகர்களுக்கு இந்த மாதம் இந்த மாதம் வெற்றிகரமாக இருக்கும். உங்களுடைய விடாமுயற்சிக்கு  வெற்றியை தரும். வாகன ரீதியான பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் செல்லுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறும் யோகமுண்டு. உங்களுடைய திறமையை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கான காலம் இதுவாகும்.

கும்பம்:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். விடா முயற்சி வெற்றியை தாரும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடங்களில் முன்னேறும் வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளுடைய கல்வி விஷயத்தில் கவனம் கொள்ளுங்கள்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் முழுவதும் பல நல்ல விஷயங்கள் நடக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் கை கொடுக்கும். வீடு, சொத்து வாங்கும் யோகம் பிறக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயம் காணும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில்  நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

மேலும் படிக்க...Horoscope Today: சனியின் வீட்டில் நுழையும் செவ்வாய் பகவான்..பாடாய் படப்போகும் 7 ராசிகள்! இன்றைய ராசி பலன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios