Horoscope Today: சனியின் வீட்டில் நுழையும் செவ்வாய் பகவான்..பாடாய் படப்போகும் 7 ராசிகள்! இன்றைய ராசி பலன்!
Horoscope Today: நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் ஏப்ரல் 7-ம் தேதி, சனியில் வீட்டில் பிரவேசிக்கிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இது சிக்கலை அதிகப்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
நெருப்பு கிரகமான செவ்வாய் பகவான் ஏப்ரல் 7-ம் தேதி, சனியில் வீட்டில் பிரவேசிக்கிறார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இது சிக்கலை அதிகப்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.
சனியில் வீட்டில், செவ்வாய் பகவான்:
ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது.
தைரியம், ஆற்றல், நிலம், திருமணம் ஆகியவற்றுக்கு சிறந்து விளங்கும் செவ்வாய் கிரகம் ஏப்ரல் 7ம் தேதி ராசியை மாற்றப் போகிறார். கும்ப ராசியில் ஏப்ரல் ஏழாம் தேதி செல்லும் சனி, அங்கு மே 17, 2022 வரை சஞ்சரிப்பார். செவ்வாயின் ராசி மாற்றம் பெரிய மாற்றம். அதன் பலன் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். இந்த செவ்வாய் பெயர்ச்சி சனியின் கும்ப ராசியில் நடக்கிறது.. எந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச் அசுபமானது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்:
ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் கடகத்தில் வலுவிழந்துள்ளது. செவ்வாய் மாற்றத்தால் திருமணம், கூட்டு மற்றும் தொழில் ஆகியவற்றில் சிரமங்களை ஏற்படுத்தும். செவ்வாய்ப் பெயர்ச்சியின் போது, பணியிடத்தில் கூடுதல் பணி அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும். சிறு சிறு வாக்குவாதங்களையும் சந்திக்க நேரிடும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணையிடம் புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வது உத்தமம்.
சிம்மம்:
இந்த செவ்வாய் சஞ்சாரத்தின் போது பணிபுரியும் இடத்தில் அதிகாரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். சொத்து தகராறு ஏற்படலாம் அல்லது பழைய தகராறு மீண்டும் தலை தூக்கலாம். பேச்சு சற்று உக்ரமாக இருக்கும் என்பதால்,சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அமைதியான முறையில் தீர்க்க முயற்சிப்பது நல்லது. இந்த நேரத்தில் ஆபத்தான பணிகளை மட்டும் தவிர்க்கவும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்காது. பயணத்தின் முழு காலத்திலும் ஒருவர் ஒருவித மன உளைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் இந்த காலத்தில் அதிகம் உள்ளன. இருப்பினும், சிலருக்கு குடும்பத்திலிருந்து பிரியும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
துலாம்:
செவ்வாய் சஞ்சாரத்தால் மன உளைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலை ஏற்படலாம். பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. வேலையில் சிக்கல் ஏற்படலாம். தற்போது சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். வேலையை மாற்றும் முடிவை எடுக்க வேண்டாம்.வியாபாரத்தில் பண இழப்பு ஏற்படும். உத்யோகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்லதல்ல, எனவே இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எந்த ஒரு பெரிய விஷயத்திலும் தலைநீட்ட வேண்டாம். முக்கியமான வேலைகளில் பெரியவர்களுடன் அனுசரித்துப் போகவும். பயணங்கள் அதிகரிக்கும் ஆனால் அதனால் பயன் எதுவும் இருக்காது. இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பதும், சண்டை சச்சரவுகளை தவிர்ப்பதும் நல்லது.
விருச்சிகம்:
செவ்வாய் சஞ்சாரத்தால் செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். பணிபுரியும் இடத்தில் பங்குதாரருடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். வியாபாரத்தில் பண இழப்பு ஏற்படலாம். செவ்வாயின் சஞ்சார காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.வருமான ஆதாரங்கள் குறையும்.
மகரம்:
செவ்வாய் சஞ்சாரத்தால் இந்தக் காலகட்டத்தில் கூடுதல் பணிச்சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தகராறு ஏற்படலாம். மேலும் உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பயணத்தின் போது வேலைகளை மாற்றுவது பிரச்சனைகளை ஏற்படுத்தும். செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பண இழப்பு ஏற்படலாம்.