Today astrology: ஏப்ரல் 12 வரை குருவின் அருள்....இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பார்ட்...இன்றைய ராசி பலன்..!
Today astrology: குருவின் அருளால் ஏப்ரல் 12ம் தேதி வரை, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குருவின் அருளால் ஏப்ரல் 12ம் தேதி வரை, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் மாறும் போது, அதாவது அஸ்தமனம் அல்லது உதயமாகும் போது, நிச்சயமாக ஒருவரின் வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிக்கும் இருக்கும். குரு பகவான், வாழ்வில் செழிப்பு, கல்வி, குழந்தைகள், சமயப் பணி, மங்களகரமான பணி மற்றும் திருமணம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
குரு ராசி மாறும் போது அனைத்து விதமான சுப காரியங்களும் தடைபடும். ஆனால், ஜோதிடத்தின் படி, வியாழனுக்கு தனி இடம் உண்டு. இந்த நேரத்தில், தேவகுரு பிருஹஸ்பதி கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். ஏப்ரல் 12ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பகவான் பிரவேசிக்கிறார். ஏப்ரல் 12 வரை சில ராசிகளில் குருவின் சிறப்பு அருள் இருக்கிறது. குருவின் அருளால் ஏப்ரல் 12ம் தேதி வரை, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் வியாழனின் எழுச்சியால் பண வரவு எற்படும். எப்படியாவது வருமானம் அதிகரிக்கும், வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். முதலீடு செய்தால், நீங்கள் சிறந்த பலன்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம்.புதிய வாகனம், வீடு வாங்கலாம். தொழிலதிபராக இருந்தால் பெரிய ஒப்பந்தம் ஒன்றை பெறலாம், இது வருமானத்தை அதிகரிக்கும்.மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார பக்க வலுவாக இருக்கும்.
சிம்மம்:
குருவின் அருளால், சிம்ம ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்காது. எதிரிகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். திருமண காரியங்கள் கைகூடும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு இருக்கும். புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள்.
ரிஷபம்:
குருவின் அருளால், அதிஷ்ட்டம் கிடைக்கும்.ரிஷபம் ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் தொடர்புடையவர்களாக இருந்தாலும் எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். இது தவிர, ஒரு சிறந்த வேலை வாய்ப்பும் கிடைக்கலாம்.
தனுசு:
இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். இது தவிர, இந்த நேரம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். மேலதிகாரி பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். மன அமைதியை அனுபவிப்பீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு வலுவான நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் தரும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருள் இன்பம் பெருகும். போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டி இருப்பவர்கள், வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பண ஆதாயமும் கூடும்.வேலையில் மேலதிகாரி பாராட்டப்படுவீர்கள். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.