Today astrology: இரண்டு முறை ராசி மாறும் சனிபகவான்... இரட்டிப்பு யோகம் பெரும் 5 ராசிகள்! இன்றைய ராசி பலன்..!
Today astrology: ஜோதிடத்தில், மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி பகவான், ராசி மாறும் போதெல்லாம் மக்களுக்கு பல்வேறு பலன்களை தருவார்.
ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனி பகவான், ராசி மாறும் போதெல்லாம் பல்வேறு பலன்களை தருவார். அதிலும், கடந்த 2021-ல் ஒருமுறை கூட ராசி மாறாத சனி இப்போது 2022-ல் இரண்டு முறை ராசியை மாற்றப்போகிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து வைத்து கொள்வோம்.
இரண்டு முறை ராசி மாறும் சனி பகவான்:
நவக்கிரங்களிலேயே சனி பகவான் முக்கியமானவர். ஆனால், மற்ற கிரகங்களை ஒப்பிடுகையில் மெதுவாக நகரும் சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, தனது ராசியை மாற்றிவிடுகிறது. இறுதியில், சனி பகவான் 12 ராசிகளை சுற்றி வர 30 ஆண்டு காலம் ஆகும்.
அதன்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு,ஏப்ரல் 29ம் தேதி சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். பிறகு, ஜூன் 5 முதல் பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகர ராசியிலேயே இருப்பார். இதற்குப் பிறகு, அவர் ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார்.
அதன் பிறகு மீண்டும் கும்ப ராசிக்கு வருவார். நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி தனது ராசியை இரண்டு முறை மாற்றுவது மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை தரும். சில ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு பலன்களை கொடுக்கும். அவை யார் யாருக்கு என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
சனியின் ராசி மாற்றங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்களும் உருவாகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மொத்தத்தில், உங்கள் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் சனி பகவானின் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொண்டு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29க்குப் பிறகு வாழ்கை தலைகீழாய் மாறும். நிதி நிலை வலுவடையும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சனிபகவான் லாபம் தருவார். நினைத்த வேலையை நீங்கள் பெறுவீர்கள். மேலதிகாரியுடன் நல்லுறவு உருவாகும். அதிக பாராட்டுகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவு அதிகரித்து காணப்படும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் சுப பலன் கிடைக்கும். நிதி நிலை செழிப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த வெளியூர் பயணம் நடக்கும். அதேபோன்று, புதிதாக தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். பண ஆதாயம் அதிகம் இருக்கும். தொழில்-வியாபாரத்திற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைக்கலாம்.
மகரம்:
மகர ராசியினருக்கும் இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். பணம் சம்பாதிக்க உங்களுக்கு வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் மகிழ்ச்சி, செழுமை மற்றும் சிறப்பான வாழ்க்கையை இந்த காலத்தில் எதிர்பார்க்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை வந்து சேரும். தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் அதிக லாபம் தரும். பெரிய ஒப்பந்தங்களை நீங்கள் எளிதாக பெற்று அதில் அதிக லாபம் காண்பீர்கள்.
கும்பம்:
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறப் போகிறார். சனியின் இந்த மாற்றம் மிகவும் நல்லதாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு அரசியல் துறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகும். மகரம் என்பது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஆகையால், சனியின் பெயர்ச்சி இந்த ராசிக்கு மங்களகரமானதாகவும் நன்மை பயக்கும் வகையிலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.