Today astrology: கும்ப ராசியில் ராகு கேது பெயர்ச்சி... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடித்தது ''ஜாக்பார்ட்''...
Today astrology: ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள் அவர்களுக்கு அளவில்லா பலன்களை தருகிறது.
நாம் வாழும் வாழ்கை, நம்முடைய கையில் உள்ளது என்றாலும், சிலருக்கு வெற்றி என்பது எளிதில் கிடைக்காது. சிலருக்கும், எந்த விதமான சிரமமும் இன்றி வெற்றி கிடைக்கும்.
அப்படியாக ஜோதிடத்தின் படி, ராசிகளை வைத்தும் ஒருவரின் வாழ்கையின் நல்லது, கெட்டது கணிக்கப்படுகிறது. குறிப்பாக, ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இந்த கிரகங்களில் சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் மீது பொதுவாக மக்களுக்கு அதிக அச்சம் இருக்கின்றது. இந்த கிரகங்களின் ஆபத்திலிருந்து தப்பிக்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரப்படி ராகு மற்றும் கேது கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற குறைந்தது 18 மாதங்கள் ஆகும். இந்த கிரகங்களின் சிறப்பு என்னவென்றால், இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் வக்கிர இயக்கத்தில் அதாவது தலைகீழ் இயக்கத்தில் நகர்கின்றன. ஆனால், தற்போது கும்ப ராசியில் ராகு கேது பெயர்ச்சி சஞ்சரித்து வருகின்றனர்.
இதனால் இந்த கிரகங்களின் மாற்றம் அடுத்த கிரகத்தில் இல்லாமல் முந்தைய இடத்தில் நடக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 12ம் தேதி ராகுவும் கேதுவும் தங்கள் ராசியை மாற்றுவார்கள். இந்த ராசி மாற்றத்தில் ராகு, மேஷ ராசியிலும் கேது துலா ராசியிலும் மாறப்போகிறார்கள். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் முக்கிய மாற்றங்கள் அவர்களுக்கு அளவில்லா பலன்களை தருகிறது.
அவை, எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்களை தருகிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்:
ராகு, கேதுவின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த சஞ்சாரத்தால் இவர்களுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கும். ரிஷப ராசிக்காரரகளுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் நிதி சிக்கல்களில் இருந்து விடுபட நல்ல வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
மகரம்:
மகரம் மகர ராசியில் பிறந்தவர்களே இது வரை உங்க ராசிக்கு 5ஆம் இடத்திலும்,11ஆம் இடத்திலும் இருந்த ராகு,கேது. இப்பொழுது 4ஆம் இடத்திற்கும்,10,இடத்திற்கும் மாறுகிறார்கள். மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கப் போகிறது. மகர ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். தடைபட்ட வேலைகள் முடியும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்தக் காலத்தில் பலன் அடைவார்கள். வணிக பயணத்தினால் லாபம் உண்டாகும்.
மிதுனம்:
ராகு, கேதுவின் சஞ்சாரம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். ராகு, கேதுவின் இந்த மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு புதிய வேலைக்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். தடைபட்ட வேலைகள் முடியும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் இந்தக் காலத்தில் பலன் அடைவார்கள். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.வணிக பயணத்தினால் லாபம் உண்டாகும்.
கும்பம்:
ராகு, கேதுவின் சஞ்சரம் கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கப் போகிறது. நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். பணம் சம்பாதிக்க பல புதிய வழிகள் திறக்கும். உங்களின் கடின உழைப்பு வீண் போகாது. இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலிலும் லாபம் கூடும். திருமண காரியங்கள் கைகூடும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். துலா ராசிக்காரர்களின் வருமானம் கூடும். தொழிலில் முன்னேற்றம் அடைய அதிகப்படியான வாய்ப்புகள் கூடி வரும். முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் மிகவும் நல்ல நேரமாக இருக்கும். குறிப்பாக சொத்தில் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மொத்தத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.