ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, சனியின் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது சில ராசிகளுக்கு சாதகம் என்றால், 3 ராசிக்காரர்களுக்கு ஆபத்தானதாக இருக்கும்.
ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது.
தைரியம், ஆற்றல், நிலம், திருமணம் ஆகியவற்றுக்கு காரகரான செவ்வாய் கிரகம் பிப்ரவரி 26ம் தேதி ராசியை மாற்றப் போகிறார். செவ்வாயின் ராசி மாற்றம் பெரிய மாற்றம். அதன் பலன் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்.
செவ்வாய்க்கு நட்பாக இருக்கும் ராசிகளை சேர்ந்தவர்களுக்கு அல்லது ராசி அதிபதி செவ்வாயின் நண்பராக இருக்கும் மேஷம், மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நன்றாக இருக்கும், ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி வேதனை தரக்கூடியது.
இந்த செவ்வாய் பெயர்ச்சி சனியின் மகர ராசியில் நடக்கிறது. எந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் அசுபமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த சஞ்சாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். அவர்களின் வாழ்க்கையில் இந்த ராசி மாற்றம் திருமணம், கூட்டு மற்றும் தொழில் ஆகியவற்றில் சிரமங்களை ஏற்படுத்தும். கூட்டாண்மை தொடர்பான முடிவுகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணையிடம் புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வது உத்தமம்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் நிதி நிலைமையை பாதிக்கும். சொத்து தகராறு ஏற்படலாம் அல்லது பழைய தகராறு மீண்டும் தலை தூக்கலாம். பேச்சு சற்று உக்ரமாக இருக்கும் என்பதால்,
சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அமைதியான முறையில் தீர்க்க முயற்சிப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். கடன் கொடுத்த பணம் திரும்ப வராது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்லதல்ல, எனவே இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எந்த ஒரு பெரிய விஷயத்திலும் தலைநீட்ட வேண்டாம். முக்கியமான வேலைகளில் பெரியவர்களுடன் அனுசரித்துப் போகவும். பயணங்கள் அதிகரிக்கும் ஆனால் அதனால் பயன் எதுவும் இருக்காது. இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பதும், சண்டை சச்சரவுகளை தவிர்ப்பதும் நல்லது.
மேஷம்:
நிதி ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் அங்கீகாரமும் மரியாதையும் பெறுவீர்கள். ஒவ்வொரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். பயணங்களால் நல்ல முன்னேற்றமும் பண வரவும் கிடைக்கும்.
மிதுனம்:
செவ்வாயின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி விஷயத்தில் அதிக லாபங்களை அளிக்கும். திடீரென்று எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் விவாதங்களில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு சாதகமான நேரம். இந்த கலாத்தில் பெரிய சாதனைகளை செய்யலாம்.
கன்னி:
பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் இந்த காலத்தில் அதிகம் உள்ளன. இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் விரும்பிய பலன்களை அடைய முடியும். முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமாக நேரமாக இது இருக்கும். இந்த நேரத்தில் ஆபத்தான பணிகளை மட்டும் தவிர்க்கவும்.
