ஜோதிடத்தின் கணிப்பில், கிரக மாற்றத்தால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும், யார் யாருக்கு ஆதாயம் என்று பார்க்கலாம். 

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரிய பகவான், சனியின் ராசியான மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு அசுபமானதாக கருதப்படுகின்றது. 

அதன்படி, சூரியன் தான் பூமியின் அஸ்திவாரமாய் விளங்குகிறது. சூரியனின் மூலம்தான் பூமியில் ஜீவன் வாழ்கிறது. ஜோதிடத்திலும் சூரியனை மிக முக்கியமான கிரகமாகக் கருதி, கிரகங்களின் அரசன் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சூரியனின் நிலையில் ஒரு சிறிய மாற்றம் கூட மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

தற்போது சூரிய பகவான் தனது மகன் சனியின் ராசியில், அதாவது மகர ராசியில் இருக்கிறார். பிப்ரவரி 26 அன்று தனது மகன் சனிக்கு சொந்தமான இரண்டாவது ராசியில் அதாவது கும்ப ராசியில் நுழைகிறார். அவர் ஒரு மாதம் இந்த ராசியில் இருப்பார். குரு பிரஹஸ்பதி ஏற்கனவே கும்பத்தில் இருக்கிறார். ஆகையால், சூரியன் கும்ப ராசியில் நுழைவது வியாழனை அஸ்தமிக்கச் செய்யும். இந்த நிலை 4 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரும். எனவே, கீழே குறிப்பிட்டுள்ள, ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் 

பிப்ரவரி 26-ம் தேதி செவ்வாய் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இதனால் விருச்சிகம், சிம்மம், மீன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். மறுபுறம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பிப்ரவரி 27ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரனின் இந்த மாற்றத்தின் தாக்கம் 59 நாட்களுக்கு இருக்கும். மேஷம், கடகம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். மறுபுறம், இது ரிஷபம், மீனம், மிதுனம், கும்பம், கன்னி, மகரம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசியினருக்கு சுக்ரனின் இந்த சஞ்சாரத்தால் சங்கடம் உண்டாகலாம். 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் தொழில், பணியிடத்தில் பல சவால்கள் வரலாம். சில இழப்புகளும் ஏற்படலாம் அல்லது கடின உழைப்பின் பலன் எதிர்பார்த்தபடி கிடைக்காமல் போகலாம். இக்கட்டான சூழ்நிலையில் மனம் தளராமல் பொறுமையாக இருங்கள். பொறுமை ஒன்றே இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நிதி இழப்பை ஏற்படுத்தும். இதனால் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். விலை உயர்ந்த ஒரு பொருளை இழக்கும் நிலையும் ஏற்படலாம். ஆகையால் இந்த காலகட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் நிதி இழப்பு ஏற்படும். இது உங்கள் நிதி நிலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். முதலீடும் நஷ்டத்திற்கு வழிவகுக்கும். வீட்டில் பணப் பிரச்னை ஏற்படும். பணப் பரிமாற்றம், நிதி நிலைகள் குறித்த எந்த விதமான முடிவை எடுப்பதற்கும் முன்பும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. 

 விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமங்களைத் தரும். குறிப்பாக, வேலை-வாழ்க்கை சமநிலையை உருவாக்கத் தவறிவிடுவீர்கள். இதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படலாம். பதற்றம் அதிகரிக்கலாம். பணியிடத்திலும் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அனைத்து இடங்களிலும் மிக எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயல்படுவது நல்லது.