சிம்மம் மற்றும் மிதுனம் ராசிகள் கொண்ட தம்பதிகள் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும். 

ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது.

மேஷம்: 

நீங்கள் நினைத்ததை எளிதில் முடிக்கும் செயல் உடையவர்கள். பழைய பிரச்சனைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களுக்கு மத்தியில் மதிப்பு உயரும். இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலேயே ராகு தொடர்வதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன கூச்சல் குழப்பங்கள் வந்து போகும்.

ரிஷபம்: 

உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் புத்தாண்டு பிறப்பதால், மனசாட்சியின் படி செயல்படுவீர்கள் . கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். சில சமயங்களில் துணிச்சலாக முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வழக்குகள் சாதகமாகும். வரவு கேற்ப செலவு இருப்பதால் பணத்தை சிக்கனமாக கையாள்வது அவசியம்.

மிதுனம்: 

பிற்பகல் முதல் பிரச்சனைகள் விலக தொடங்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரிப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தம்பதிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கடகம்: 

உங்கள் ராசிக்குள்ளேயே, மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள், வாகனம் செலவு வைக்கும். எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும்.

சிம்மம்: 

கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். இரக்கம் மிகுந்த நீங்கள் சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். உங்களுக்கு திடீர்ப் பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி: 

உடன் பிறந்தவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். ஆன்மிகப் பயணம் செல்லத் திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வருமானத்தை உயர்த்துவீர்கள். எதிலும் நேர்மையை விரும்புவராக இருப்பீர்கள்.

துலாம்: 

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தடைபட்ட வேலைகள் சுமுகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும்.

விருச்சகம்: 

உங்கள் ராசிக்கு, பொறுமையுடன் காரியங்களை முடிக்க முயலுங்கள். பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். வருங்கால கணவர் உங்கள் கண் முன் தென்படுவார். உங்களின் ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

தனுசு: 

பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். வீட்டை வசதிக்கேற்ப, ரசனையுடன் கட்டி முடிப்பீர்கள். பிற்பகல் முதல் எச்சரிக்கை தேவை. பாசமும், நேசமும் நிறைந்தவர் நீங்கள். உங்களுக்குச் சுக்ரன் சாதகமாக இருக்கும்போது, பிரச்னைகளைச் சமாளிக்கும் வல்லமை உண்டாகும்.

மகரம்: 

நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். உங்களுக்கு லாப வீட்டில் சுக்ரன் அமர்ந்துள்ளது. குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும். பொறுமையால் சாதிப்பவர் நீங்கள். அதிகார பதவியில் இருப்போரின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்: 

இந்தப் ஆண்டில், மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளும் சூழ்நிலை அமையும். உங்கள் ராசிக்கு, உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நண்பர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: 

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சுக்ரன் வலுவாக நிற்கும். விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகளை பற்றி சிந்திப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். மூத்த சகோதரரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.