வரும் மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிப்பது காங்கிரஸா..? அல்லது மீண்டும் பாஜகவா ? என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது. அவ்வப்போது வெளிவரும் கருத்து கணிப்பு முடிவுகளும் மக்களை குழப்பம் அடைய செய்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மோடியின் ஆட்சி காலத்தில் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலை இல்லாத திண்டாட்டம் என ஆளும் பாஜகவை காங்கிரஸ் தொடர்ந்து குறை கூறி வருகிறது.

மேலும், அடுத்த ஆட்சி கண்டிப்பாக காங்கிரஸ் தான் என பெரும்பாலான  கருத்துக்களும் நிலவி வந்தது. அதே வேளையில் தற்போது நிலைமை சற்று மாறி வருகிறது என்று கூட சொல்லும் அளவிற்கு, புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, விமானி அபிநந்தனை இரண்டே நாட்களில் பாகிஸ்தான் விடுவித்தது என்பது வரலாற்றிலேயே மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. காரணம் மோடியின் செல்வாக்கு என்ற பேச்சும் அடிபடுகிறது. சமீபத்தில் செயற்கைக்கோளையே ஆகாயத்தில் தாக்கி ஆழிக்கும் வல்லமை கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளது. இப்படி பல காரணங்கள் பாஜகவிற்கு காரணமாக அமைந்து உள்ளன.


 
இதற்கிடையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று  பார்த்தோமேயானால், சில பல சுவாரஸ்ய விஷயங்கள் ஜாதகப்படி சென்டிமெண்டாக புலப்படுகிறது. அதன் படி, 1949 முதல் 1956 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர முடியும் என்கிறது அஸ்ட்ரோலஜி.

அதற்கு உதாரணமாக பிரேசில்,ரஸ்யா, இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகளை ஆளும் ஜாம்பாவான்களும் 1949 முதல்1956 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களே. அதுமட்டுமல்ல..ஜெர்மனி, ஜப்பான் சிங்கப்பூர் ,UAE ,சுவிசர்லாந்து, தாய்லாந்து,UK, பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளை ஆள்பவர்களும் 1949 முதல் 1956 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களே. 

அதே வேளையில் ஆஸ்திரேலியா கனடா, பிரான்ஸ் நாட்டை ஆண்ட ஜாம்பாவான்களும் 1949  முதல் 1956 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களே... ஆனால் அமெரிக்கா மட்டுமே இதற்கு விதி விலக்கு காரணம்...ட்ரம்ப் பிறந்த ஆண்டு 1946. இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது, சில அடிப்படை உண்மைகளை புரிந்துகொள்ள வைக்கின்றது...

அதாவது, ப்ளூட்டோ, யுரேனஸ், பிளானட் எக்ஸ் இந்த கோள்களின் சக்தி, பிறந்த ஆண்டு ஜாதகத்தோடு ஒன்றி போகும் போது, பெரும் நாடுகளை ஆளக்கூடிய சக்தியை கொடுக்கிறது. அந்த வகையில் வரும் மக்களவை தேர்தலின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளக்கூடிய வாய்ப்பு அரசியல்வாதிகளில் சிலருக்கு இருக்கின்றதா என்பதை பார்க்கலாம்..?

சரத் பவார்- 1940  ஆம் ஆண்டு  பிறந்தவர் 

முலாயம் சிங்க் யாதவ் - 1939 ஆம் ஆண்டு பிறந்தவர் 

பி. சிதம்பரம் -1944  ஆம் ஆண்டு பிறந்தவர் 

ராகுல் காந்தி - 1970 ஆம் ஆண்டு பிறந்தவர் - காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் முன்னிறுத்தப்படலாம். அவருக்கு ஜாதகப்படி அனைத்து அம்சமும் மிகவும் நன்றாக உள்ளதாம்.. அவர் கண்டிப்பாக ஒரு நாள் பிரதமராக வருவார். ஆனால் 2019 இல் இல்லை என்பதை கூறுகிறதாம் இந்த 3 கோள்களின் சக்தி.

அதுமட்டுமல்லாமல், 1949 -1956  ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட  காலத்தில் ராகுல் பிறக்கவில்லை...ஆனால், கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ 1971 ஆம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது (விதி விலக்கு )

பிரியங்கா காந்தி

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்த மாதிரி பிரியங்காவின்   அரசியல் வருகை பெரும் மாற்றத்தை கொடுக்குமா என்றால்.. இல்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்லாமல் இவர் பிறந்த ஆண்டு 1972.

அரவிந்த் கெஜ்ரிவால் - 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். எனவே இவர்களில் இந்தியாவை ஆள இப்போதைக்கு வாய்ப்பு  இல்லை என்றே கூறலாம். அடுத்து, வேறு  யாரெல்லாம் வாய்ப்பு பெற்று உள்ளனர் என்று பார்ப்போமேயானால், மாயாவதி(1956), மம்தா பானர்ஜி(1955), நரேந்திர மோடி(1950). இதில் மாயாவதிக்கும் மம்தா பானர்ஜிக்கும் அஸ்ட்ரோலஜி  மிக அருமையாக உள்ளதாம். ஆனால், ஒரு மாநிலத்தின் தலைமையாக இருக்க  போதுமான சக்தி மட்டுமே அவர்களுக்கு இருக்கின்றதாம்.

அதே போன்று, சசி தரூர்(1956 ) மற்றும் நரேந்திர மோடி இவர்கள் இருவருக்கும் நல்ல ஜாதக பலன் உள்ளதாம்.ஆனாலும் 3 கோள்களின்  பலன் யாருக்கு அதிகமாக உள்ளதோ அவர்களே இந்த நாட்டை ஆள முடியும் என்கிறது ஜாதக கணிப்பு...

அமித் ஷா (1960), ஜாதகப்படி அனைத்து அம்சமும் பெற்று இருந்தாலும் 1960 ஆம் ஆண்டு பிறந்து இருப்பதால், நாட்டை ஆளக்கூடிய வாய்ப்பு குறைவு தானாம்...

நரேந்திர மோடி 

அப்படி என்றால் ப்ளூட்டோ, யுரேனஸ், பிளானட் எக்ஸ் இந்த மூன்று கோள்களின் சக்தியுடன் நாட்டை ஆளக்கூடிய ஜாதகத்தை கொண்டவர் தானாம் நரேந்திர மோடி..

2014 ஆம் ஆண்டு பிரதமராக தேர்வான போது, பிளானட் எக்ஸ் கோளின் அனைத்து அம்சமும் மோடிக்கு சாதகமாக அமைந்து  இருந்ததாம். குறிப்பாக மோடியின் ஜாதகத்தில் 7 ஆம் இடத்தில் அமைந்து உச்சம் பெற்று இருந்ததாம்.

2019 ஆண்டான இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர தேவையான ஜாதக பலனும், கோள்களின் கிரகணங்களும் மீண்டும் பலம் பெற்று, குறிப்பாக யுரேனஸ் மோடியின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளதால் அவரே மீண்டும் பிரதமராக  வரக்கூடிய வாய்ப்பு  பெற்று உள்ளாராம்.

மேற்குறிப்பிட்ட அஸ்ட்ரோலஜி கணிப்பு எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை தேர்தல் முடிவில் வெற்றி வாய்ப்பை சூடும் கட்சி மற்றும் ஆட்சியை பொறுத்திருந்து பார்க்கலாம்.