Horoscope: ஏப்ரல் மாதம் முழுவதும் இந்த 6 ராசிகளுக்கு ''ஜாக்பாட்'' யோகம்...ஏப்ரல் மாத ராசி பலன் 2022..!

Horoscope: ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் 'ஜாக்பாட்' யோகம், பிறக்கப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

Horoscope monthly astrology predictions

ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் 'ஜாக்பாட்' யோகம், பிறக்கப்போகிறது  என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம். ஜோதிட கணிப்பின் படி, ஏப்ரல் மாதம் முக்கியமான கிரகங்களின் நிலையில் மாற்றம் ஏற்படப்போகின்றது. இந்த கிரகங்களின் மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை உள்ளராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அப்படியாக, ஏப்ரல் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்:

ஏப்ரல் மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, நன்மை பயக்கும். ஏனெனில், தற்போது உங்கள் ராசியில் இருக்கும் ராகு ஏப்ரல் துவங்கியதும் விட்டு விலகி போகும். இந்த கிரக மாற்றத்தால், உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த தடைகளில் இருந்து விடுபடுவீர்கள். செல்வம் செழிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள். புதிய தொழில் துவங்கும் யோகம் கிடைக்கும். 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதம் முழுவதும்,  பல்வேறு காரியங்களில் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய வாய்ப்புகள் உண்டாகும். திருமண காரியங்கள் கைகூடும். போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆகும் மாணவர்கள் வெற்றியடையும் வாய்ப்பு கிடைக்கும். 

மிதுனம்:

மிதுனம் ராசியினர் ஏப்ரல் மாதம் முழுவதும் அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுகபோகங்கள் விரிவடையும்.பணியிடத்தில் மாற்றம் சாத்தியம், கடின உழைப்பு அதிகம் தேவை. தாயின் ஆதரவை பெறுவீர்கள். லாபம் கூடும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும், பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் பலன் கொடுக்கும். இந்த நேரத்தில் உங்கள் வியாபாரத்தில் லாபம் கூடும். படிப்பில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். அமைதியான சூழல் ஏற்படும். இந்த நேரத்தில் லட்சுமி தேவி உங்களுக்கு சிறப்பு ஆசீர்வாதங்களை தருவார். பண வரவுகள் அதிகமாக இருக்கும். முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரம்.

தனுசு:

ஏப்ரல் மாதத்தில், தனுசு ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். சனி பகவானால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறையும். லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண ஆதாயங்களின் தொகையைப் பெறுவீர்கள். வேலை மாற்றத்திற்கு சாதகமான காலம் ஆகும். 

கன்னி:

கன்னி ராசிகர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். ஏப்ரலில் கேது உங்கள் ராசியை விட்டு வெளியேறுகிறார். அதன் பிறகு பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். காதல் விஷயத்தில் வெற்றி உண்டாகும். பண வரவுகள் இருக்கும். முதலீடுகளில் லாபம் உண்டாகும்.

 மேலும் படிக்க...Today astrology: புதன் அஸ்தமனத்தால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய 7 ராசிகள்..! இன்றைய ராசி பலன்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios